உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அதில் ஈரம் எஞ்சும்
- வைரமுத்து

அர்த்தமுள்ள இவ்வரிகளுக்கு என்னுள் உயிர் கொடுத்தவளே, உன்னை பற்றி .....

படித்திவிட்டு ...

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதல் என்றால்

Mar 29, 2011

இடியுடன் கூடிய மழை


இயந்திரமாய் இருந்த என்னை இயக்கிவிட்டாய் 
இயங்குகிறேன். இயங்காமல் இருக்க முடியவில்லை 

மயிலிறகு உன் மென்மையை உணர உன் மேல் வீசும் அடி  

உன் மென்மையை உணர பூக்களுக்கு உன் தலையில் இடம் கொடு. 
உன் மனதில் எனக்கோர் இடம் கொடு

என்னிடம் இருந்து விலகி இருந்தால் நான் உன்னை நினைக்க மாட்டேன் என்று நினைத்தாய் அடி. நான் யானை அடி. உன் நினைவொன்றே வாழ்நாள் முழுவதும் அதிர்வுகள் தரும். நீ என்னை கடந்து செல்கையில் என்னை நினைப்பாய். நான் இல்லாத பொழுதும் என் பேருந்து நிறுத்தத்தில் என்னை நினைப்பாய். என்னை நீ மறக்க மாட்டாய். உன்னை மறவேன் என்று நினைத்தாயோ. 
(Now I am incepted in your thought. It will grow. You cant stop)(note: on elephant. Trumpeting will reach long distances and elephants can sense even low freq. that is why if there is problem they trump)

உன்னோடு நான் கண்ட பந்தம் மண்ணோடு மழை கொண்ட சொந்தம் 
காய்ந்தாலும் அதில் ஈரம் எஞ்சும் - வைரமுத்து

கடல் ஒன்று அலைகள் நூறாயிரம் 
நீ ஒருத்தி உன் நினைவுகள் பல்லாயிரம்

காலை பகல் இன்றி ஊர் ஊராய் சுற்றும் மேகங்கள் பூவுலகத்தை காப்பது போல் உன்னை காப்பேன் 

மேகம் கூற்று: 
என் நிழல் கூட என்னில் ஓட்ட வில்லை அடி. உன்மேல்(உலகம்) விழுகிறது 

என்னுள் இருந்தவனை வெளியேற்றி 
நீ உள்ளே சென்றாய் 

இன்று அவள் இடம் சொல்வேன்

என்னை சுற்றி உள்ள மனிதர்கள் எப்படி உன்னை விட்டு வைத்திருக்கிறார்கள், என்னக்காகவா ?

பண்பட்டவனும் படகில் பயணம் செய்தால் பள்ளத்தில் இறங்குவானடி 

தீபத்தில் திரியாய் இருப்பேன் அடி 
என்னை சுட்டாலும் உனக்கு உணவு கொடுப்பேன் அடி 
நாம் இருவரும் ஒரே தருணத்தில் உயிர் துறப்போம் அடி 
உன் தந்தை தன் தீபத்தில் இருந்து என்னில் ஏற்றும் நாள் எப்பொழுது

எறும்பு நீ மழையில் நனைந்தால் நான் காளானாக முளைப்பெனடி

யாரிடமும் தோன்றவில்லை 

நேற்று என்னை கொள்ளை கொண்ட உன் மௌனம்
இன்று என்னை தீக்குழம்பாய்சுட்டெரிக்குதடி

சிறு துளி வெள்ளம் கண்ணில் கரைந்ததடி 

நீ மழலையாய் இருந்த போது வடித்த கண்ணீர் கடலோ ?

விளைவறியாது பூவுலகத்தில் பிறந்த ஒவ்வோர்வரும் காதலிக்கணும். 

கவிதைகள் எழுதினேன் அடி 
உன் கண்களை எழுத முடியவில்லை. 

கண்மூடினாலும் கனவுகள் தோன்றவில்லை 
உன் கண்களே தோன்றுகிறது 

"forgot", "I didn't think you like that",  "let us be friends", "I am sorry. Don't know what actions of me made you think  like that …"… 
ஹா... ஹா... ஹா... 
யாரிடம் டபாய்க்கிறாய் ? மௌனம் சாதிக்கிறாய். 
வானம் பொழிகிறது பூமி விளைகிறது 
உன்னை என் அடி காதலித்தேன் அடி?
 ஜோக் அடித்தாயா? 
பாட்டு பாடினாயா?
உன்னை என் அடி காதலித்தேன் அடி?
அல்லது பக்கத்து வீட்டில் 25yrs இருந்தாயா?
பள்ளியில் 14yrs படித்தாயா ? 
Coaching centre'la 2yrs படித்தாயா? 
கல்லூரியில் 4yrs படித்தாயா? 
அல்லது எங்கள் ஆத்து கொலுவிற்கு வந்தாயா?
அல்லது கல்லூரியில் எனக்கு உடம்பு சரி இல்லாத போது சாம்பார் சாதம் கொடுத்தாயா?
அல்லது Chicken Pox போட்ட போது எனக்கு Record Work செய்து Notes சேகரித்து கொடுத்தாயா? 
அல்லது முதல் அலுவகத்தில் ஆட்டு மந்தையாக பத்து கல்லூரியில் இருந்து வந்த பெண்களில் ஒரு பெண்ணாக என்னுடன் Trainingஇல்  வந்தாயா?
அல்லது projectஇல்  late night dinnerஇல் ஒரு medium pizza பகிர்ந்துக் கொண்டாயோ ?
பிறகேனடி உன்னை காதலித்தேன் ?
அல்லது கொஞ்சி கொஞ்சி நான் வயோலின் வாசிக்கும் பொழுது தாளம் போட்டாயோ?  
மாமன் பொண்ணா? அத்தை பெண்ணா? 
ஏனடி காதலித்தேன் 
மௌனத்தால் மனதை திருடிவிட்டாய் அடி. 

நினைவில் கொள் இனி உன் நினைவில் நான் வருவேன் 

என்னுள் இருந்தவன் என்னுள் எங்கிருக்கிறான் ?

மயில் இறகில் எரிமலை தீ குழம்பை தொட்டு வரைந்தானோ உன்னை ... அனல் அடிக்கிறது 

நாடு கடந்து நடுகடல் மேல் நடுவானில் நடுநிசியில் நட்சத்திரங்களை கண்டாலும் நின்னை நினைப்பேன் அடி சகியே!

கண்ணாடியை உடைத்தாலும் உன் முகங்கள் அதிகரித்தன
நீ இல்லை என்று சொன்னாலும் உன் மீது அன்பு கூடுகிறது

உலகம் சிறியது வா என்னுடன் 
இருவரும் சேர்ந்து ஊர் சுற்றலாம் 
சத்திரத்தில் நம் உறவுமுறை கேட்கலாம் 
அவர்களுக்காக தாலி கட்டிக்கொண்டு கலியாணம் செய்து கொள்ளலாம் 
மற்றபடி கலியாணம் என்பது இந்த சமூகத்துக்கு ஒரு ரூபாய் தாள் 

என்ன செய்தேன் உன்னுள் என் மேல் அன்பு மலர்ந்தது? என்றாய்
எதுவும் செய்யவில்லை அடி 
அதை தான் நானும் வியக்கிறேன் 

இதயத்தில் ஓர் ஹிமயமலையை வைத்தேன் அடி
என்னுள் இருந்த ஐம்புலன்களும் செயல் படவில்லை அடி 
அப்படி ஆனால் வையகத்திருக்கு Ra"'வாக நடமாடுபவன் யார்?
  
எனக்கேன் உன்னை படைத்தவன் 
ஏனடி உலகத்தை படைதான்

ஜோவென்று பெய்கிறது மழை 
என் கண் முன் செந்தழல் ஜோதியாய் நீ இருந்தால்
நான் மழையை காண்பேனா என்ன?

அடை மழையிலும் உன் இதய துடிப்பு கேட்கிறது 

மேக கம்பளத்தில் நடந்து நட்சத்திரங்களை எட்டிப்பிடிப்போம், என்னுடன் வா.

சாலையில் நடந்தாலும் சோலையில் நடந்தாலும் சின்ன பெண்ணே அன்று சில்லென்ற மழையில் உன்னுடன் நடந்தது தான் நினைவில் உள்ளதடி!

இருபத்தைந்து ஆண்டுகள் கொண்ட உறக்கப் பழக்கத்தை இருபத்தைந்து மணி நேரத்தில்மாற்றிக்கொண்டேன் இரு இருபத்தைந்து வாரங்கள் பழகிய உன்னை ஒரு மணி நேரம் கூடநினைவில் கொள்ளாமல் இருக்க முடியவில்லை! என்ன மாயம் செய்தாய்? 

சந்தித்த பொழுது சிந்திக்கவில்லை 
சிந்திக்கும் பொழுது சந்திக்கவில்லை

உனை காண இரு கண்கள், உன் பேச்சை கேட்க இரு செவிகள், உன் கூந்தலின் மணம் அறிய இரு (மூக்கு)தவாரங்கள், உனை காதலிக்க மட்டும் ஓர் மனம் போதுமா? ஒரு வேளை உன் குழந்தையாக உன்னை நேசிப்பேனோ ? 

மரணத்திடம் மண்டறாடி, என்னை உன் மன மேடையில் சேர்க்கும் படி கேட்பேன்

எப்பவுமே சிரிச்ச முகமா அதுவும் ஐயர் ஆத்து பாஷை பேசும்போது சொக்க்ரா டா

மேகம் நீ சிந்திய நட்சத்திரங்கள் என் மேல் வீசுதடி 
குடையில் ஒட்டி கொண்ட முத்துக்கள் உன் மேல் சிந்த வேண்டியவை. என் அடி தடுத்தாய் 
or
முத்துக்கள் உன் குடைமேல் ஒட்டிக்கொண்டுள்ளன. பார்த்துக்கொள் நீ குடையை மடக்கும் பொழுது உன்னை சிறை பிடித்து விட போகிறது 
or
உனை கட்டிக் கொள்ள முத்துக்கள் குடை மேல் காத்திருகின்றன, சற்று எச்சரிக்கையாய் இரு 

வண்ண வண்ணமாய் கண்கள் சிவக்க தலையில் குல்லா போடாமல் சின்னதாய் சொக்காப் போட்டு கொரியா பெண்கள் வந்தாலும் கண்ணே காலமெல்லாம் உன்னுடன் தானடி 

தேனே நான் தென்றலில் நனைந்தேன் அடி, 
புயலாய் என்னைக் கொள்ளை கொள்ளும் நாள் எப்பொழுது ? 

மறக்க மாட்டார்கள் இன்னும் அதிகமாக தான் நேசிப்பார்கள் 

பல பெண்களை பார்க்கும் எனக்கு நீ மட்டும் மனதில் இருக்கிறாய் 

தண்ணீரில் அமர்ந்த (வெண்)தாமரையே, சிற்றெறும்பு நான் பல்லாயிரம் ஆண்டுகள் பின் தும்பி ஆனேன். என் மொட்டே, என் கண் பாராய், உனை கை விட மாட்டேன் அடி 

நான் கலவாண்டாள் அது உன் மனதாய் இருக்கும்

தரணியில் தஞ்சம் புகுந்தவன் நின்னில் நெஞ்சம் தொலைத்தேன் சகியே!

உனக்காக காத்திருக்கையில் என் கால்கள் எல்லாம் ஆலமரமாய் நிற்குதடி 

சிந்தையில் உன் சித்திரம் தீட்டினேன் 
செந்தமிழே என்றும் உனை மறவேன் 

அன்பு உன் பண்பு  
வெளிச்சம் உன் முகம் 
வெண்மை உன் மனம்
அழகு உன் கூந்தல்
கொள்ளைஅழகு உன் கண்கள் 
அழகிய வளைவுகள் உன் காதில் 
தந்தம் உன் கைகள் 
அம்பு உன் பார்வை 
மழலை உன் பேச்சு 
மணம் உன் மூச்சு காற்று 
ஒளி உன் மதி
ஒலி உன் கை விரல் சொடுக்கு 
நிலவில் உன் ஓய்வு 
வையகம் உன் காலடி 
நடுநிசி உன் உறக்கம் 
அமைதி உன் நியதி 
கள்ளம் உன் உள்ளம் 
தங்கம் உன் எண்ணம்  
சுருதி உன் மூச்சு
தாளம் உன் இதய துடிப்பு 
தென்றல் உன் பேச்சு 
புயல் உன் சிரிப்பு 
தமிழ் உன் தாய்மொழி
முத்துக்கள் உன் உடன் என் நாட்கள் 
நான் உன் சேவகன்
என் காலம் உன் அருகில் 
உன் உள்ளம் என் பாக்கியம் 
நேற்று உன் சிரிப்பு 
இன்று உன் அமைதி 
நாளை உன்னுடன் நம் வாழ்க்கை 

உன்னை காணும் போது கண்கள் உறைந்தன

நேற்று நினைக்கவில்லை இன்று உன்னை எழுதுவேன் என்று 

நேற்று பிறந்த போது
இன்று சந்திப்பேன் என 
நினைக்கவில்லை 

நேற்று சந்தித்த போது
இன்று நினைப்பேன் என 
நினைக்கவில்லை 

நேற்று நினைத்த போது
இன்று பழகுவேன் என 
நினைக்கவில்லை 

நேற்று பழகிய போது
இன்று யாசிப்பேன் என 
நினைக்கவில்லை 

நேற்று யாசித்த போது
இன்று நேசிப்பேன் என 
நினைக்கவில்லை 

நேற்று பயணத்தை தொடங்கிய போது
இன்று உன்னை சந்திப்பேன் என 
நினைக்கவில்லை 

நேற்று உன் பெயரை கேட்ட போது
இன்று மனத்திலும் உதட்டிலும் முணுமுணுப்பேன் என 
நினைக்கவில்லை 

நேற்று உறங்கிய போது
இன்று விழிப்பேன் என 
நினைக்கவில்லை 

நேற்று உன்னுடன் இருந்த போது
இன்று பிரிவேன் என 
நினைக்கவில்லை 

நேற்று நிலவொளியில் உன் நிழலை கண்ட போது
இன்று நித்திரையில் வருவாய் என 
நினைக்கவில்லை 

இன்று நினைத்தேன் 
நாளை மரணத்திலும் உன்னை நினைத்திருப்பேன் என்று 

இரு நிலவில் ஓர் நிலவு இல்லை என்றதும் மற்றோர் நிலவு சிதைந்து நட்சத்திரங்கள் ஆனது
சிறு துளி 
தேன் துளி 
உன் பேச்சு 

தொப்புள்க் கோடி வரை தாய்
அருகில் தோழி
தொலைவில் காதலி 
மடியில் மனைவி 
மார்பில் மகள்!

மிளகாயே! - பார்த்தால் அழகாய் சிவப்பாய் மெலிதாய் இருக்கிறாய் 
கடித்தால் சுளிரென்று உரைக்கிறாய், 
முதலில் சுளிரென்றாலும் பிறகு சுகமாய் உள்ளதடி!

யாரும் பேசாத மொழியினை என்னுடன் பேசுகிறாய்
அர்த்தம் புரியவில்லை 
ஆனால் அதன் சங்கீதம் சுகமாய் இருக்கிறது 

நிசப்தம் என்னும் எட்டாவது ஸ்வரமாய் உன்னை உணர்ந்தேன் 

உன் தேன் சுவை அறிய கூடாது என்பதற்காக தண்ணீரில் அமர்ந்தாய். எறும்பு நான் பல்லாயிரம் ஆண்டுகளாக பல உருவம் மாற்றி கொண்டு தேனியாய் ஆனேன் அடி 
மூடிகொண்டு இருக்கும் தாமரை மோட்டே என் கண் பாறை உன்னை கை விடமாட்டேன் 

தண்ணீரில் அமர்ந்தாய் தாமரையே. சிற்றெறும்பு நான் பல்லாயிரம் ஆண்டுகளாய் தும்பி ஆனேன்
என் மொட்டே என் கண் பாராய்
உன்னை கை விடமாட்டேன் 

மேகம் நீ சிந்திய நட்சத்திரங்கள் சில்லென்று என்மேல் வீசுதடி. என்ன சுகம் 

என் களஞ்சியத்தில் ஓர் மாணிக்கம் நீ 

கடமையோ புதுவையில்
வேலையோ சுவோனில்
நினைவோ டில்லியில் 
என் செய்வேன் அடி 

கடல் கடந்து வந்தாலும்
காதல் குறையவில்லை 
கண்மணியே என் நவமணியே 
என் மேல் காதல் கொள்ளடி

பல பெண்களை பார்க்கும் எனக்கு நீ மட்டும்
மனதில் இருக்கிறாய் 
உன்னுடன் கொண்ட பழக்கம் 
கொரியா'வில்லும் தொடர்கிறது - ரயிலில் தூங்கவில்லை 

இரவில் வந்தாலும் பௌர்ணமியாய் வருகிறாய் 

துன்பம் நேர்கையில் நீ துயில்
கொள்ளும் அழகை கண்டால் 
துன்பம் எல்லாம் துண்டு துண்டாகிவிடும்  

என் செவியில் உன் வார்த்தைகள் முத்தமிட்ட போதெல்லாம் என்னை மறந்தேன் 

தரணியில் தஞ்சம் புகுந்தவன் 
நின்னில் நெஞ்சம் தொலைத்தேன் சகியே 

நான் களவாண்டால் அது உன் மனதாய் மட்டும் இருக்கும் 

நித்திரை கலைப்பாளாம்   நித்திரா 
சுயநினைவை களைத்தாய் அடி ஷ்வேதா

உனக்காக காத்திருக்கையில் கால்கள் எல்லாம் ஆலமரமாய் நிற்குதடி 

ஓடையில் நீர் கலங்கினாலும் உன் முகத்தின் பிம்பத்தில் களங்கம் இல்லை  

சிந்தையில் உன் சித்திரம் தீட்டினேன் 
செந்தமிழே உனை மறவேன் அடி 

முத்தத்தை சத்தம் இல்லாமல் கொடுப்பார்கள்
நீ பேசுவதே முத்தமிடுவது போல் உள்ளது 

நீ இருக்கும் பூவுலகை காக்க சிலந்தியாய் வலை பின்னுவேன் அடி 

காதலித்துப்பார் காலம் சிறிது என்று புரியும்

காத்திருந்துப்பார் காதல் எவ்வளவு சுகம் என்று புரியும் 

என் காதலை அறிய என் எழுதுக்கோல் சிந்திய நதியில் பயணம் செய்து பார் 

விண்ணில் நிலவில்லை பெண்ணே உலகில் நீயில்லை 

எவ்வுலகிலும் மழலைகள் நடுவீதியில் கூச்சலிட்டு அடம்பிடிப்பது போல் நீயும் அடம்பிடிக்கிறாய் ஆனால் அமைதியாக 

கலைமானே என் கண் பாரடி 
பட்டாம்பூச்சி என்னில் பற்றுக்கொள்ளடி
தாமரையே என் விரல்கள் பிடித்து தவழடி 
பைங்கிளியே என் மீது பைத்தியம் கொள்ளடி

கலைமானே என் கண் பாரடி 
சுவரில் வரைந்த சித்திரமே என் செவி சாய்ப்பாய் 

ரத்தினமே என் ரகசியமாய் காதலி 
லயமே என்னில் லய்-யடி 

விண்ணே என் முன்னே வா 
தமிழே என் தர்மப்பத்தினியே  

உனக்காக அழமாட்டேன் உன்னுடன் மடிவேன்