உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அதில் ஈரம் எஞ்சும்
- வைரமுத்து

அர்த்தமுள்ள இவ்வரிகளுக்கு என்னுள் உயிர் கொடுத்தவளே, உன்னை பற்றி .....

படித்திவிட்டு ...

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதல் என்றால்

Apr 1, 2011

குறிஞ்சி

எப்ப பாத்தாலும் வானம், பூமி, நிலா, நிலம், காற்று என்று எழுதி சலிப்பு வந்து விட்டது .. அதனால் வேறோர் களத்தில் உனக்காக எழுதுகிறேன்

கடை வீதியில் கால் முளைத்து காலி ப்ளவரும் உன் பின் வரும்

இலையுதிர் காலத்தில் இலை குற்று:
பல்லாயிரம் இலைகளில் என்னை மட்டும் காற்றாய் வந்து கைபிடித்து கூட்டி சென்றாய்,  வழியில் நாம் ஆடிய நர்த்தனம் நெஞ்சம் மறக்காதடி,  விண்ணில்  நம் வாழ்வை எப்படி சொல்வேன் அடி!

மொத்தனும் குத்தனும் 
மொத்தனும் குத்தனும் 
மொத்து மொத்துனு மொத்தனும்
குத்து குத்துனு குத்தனும் 

பழைய போர்வையில் வெள்ளி முத்துக்கள்

உள்ளம் உனக்கென துறந்தேன்
உயிர் உனக்கென துறவேன்
உன் செம்பவள வாயினால்
என்னிடம் ஓர் வார்த்தை மொழிவாயோ ?

டேய் அவள கொல்ல போறேன் டா

விடியலில் விழி விரிக்கையில் கமலமே உன் முகம்

காலையில் கண் விரிக்கையில் கமலமே உன் முகம்

உன் நினைவில் என்னை நிறுத்திக்கொள்வாயோ
என் எண்ணங்களை ஏற்றுக்கொள்வாயோ
உன் மரணத்தில் என்னை மன்னிப்பாயோ?

உன் முகம் காணாமல் உறைந்தேன் அடி
உன் நிழல் கண்டு நின்றேன் அடி
என் நினைவில் வந்தாய் அடி
நிழலாய் கலந்தாய் அடி
என் அருகே நெருங்கி வாடி
என்னை உன் நினைவில் கொள்ளடி

யார் தொடங்க என்று இருவருக்கும் தெரியவில்லை

மௌனத்தை இருவரும் தொடங்கி விட்டோம்
இருவருக்கும் பிடிக்கவில்லை

வள்ளுவன் வெண்பாவை தவிர வேறேதேனும் எழுதினால் அது உன்னை பற்றி தான் இருக்கும்

பிறப்பில் இறப்பை அறியேன்
இறப்பில் மறுபிறப்பை அறியேன்
விண்ணில் நட்சத்திரங்களை அறியேன்
மண்ணில் மாந்தர்களை அறியேன்
வானவிலின் வண்ணங்களை அறியேன்
நேற்று உன்னை அறியேன்
இன்று உன்னை மட்டும் அறிவேன்
நாளை நீ எனக்கா என அறியேன்

"பஸ்சில் இடம் கொடுத்த நங்கையின் மனதில் இடம் பிடித்தாயா?" என கவிதையாய் கேட்டாள் என் பாட்டி.

கண்ணில் இருந்து கனவில் தாக்குகிறாய்
நெஞ்சத்தில் இருந்து நினைவை தாக்குகிறாய்
மனதில் இருந்துவிடு மரணம் தாக்காதடி

கடல் உன் கரங்கள் அளவு நீளம் அடி
இமயமலை உன் காலளவு உயரமடி
நிலவு உன் முகம் அளவு வட்டம் அடி
அகில லோகமும் உன் உள்ளம் அடி

அஞ்சாமல் அஞ்சல் எழுதினேன்
ஆயிரம் எழுதினேன் ஆருயிரே
ஆயினும் அன்பே அஞ்சல் பெட்டியில் ஒன்றை கூட சேர்க்கவில்லை

கண்ணில் இருந்து கனவில் தாக்குகிறாய்
நெஞ்சத்தில் இருந்து நினைவை தாக்குகிறாய்
மனதில் இருந்துவிடு மரணம் தாக்காதடி

சூரியனும் சமூத்திர முக கண்ணாடியில் சில நாழிகை முகம் பார்க்கிறான்
ஆனால் சமூத்திரமோ நாணம் கொண்டு செந்தழலாய் அலைந்தது