உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அதில் ஈரம் எஞ்சும்
- வைரமுத்து

அர்த்தமுள்ள இவ்வரிகளுக்கு என்னுள் உயிர் கொடுத்தவளே, உன்னை பற்றி .....

படித்திவிட்டு ...

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதல் என்றால்

Apr 1, 2011

பாலை

உன் விழி செய்த மாயம் என்ன பெண்ணே
விண்ணில் நட்சத்திரங்கள் இருப்பது பிடிக்கவில்லை

உன் விழி செய்த மாயம் என்ன பெண்ணே
மழலையின் உறக்கம் தனை ரசிக்க முடியவில்லை

உன் விழி செய்த மாயம் என்ன பெண்ணே
மலைகளில் பயணம் செய்யும் பாதை பிடிக்கவில்லை

உன் விழி செய்த மாயம் என்ன பெண்ணே
உன் மௌனம் தனை ஏற்க முடியவில்லை

வெண்ணிலவே மேகத்துள் ஒழிந்து கொண்டாலும் உன்னை நான் அறிவேன்
மேகம் சிறிது நாழிகை கழித்து உன்னிடம் இருந்து விலகி செல்லும் கைவிடும்
என் கண்பார்வையில் தான் இருப்பாய்
என்னுடன் வந்துவிடு என்றும் உன்னை விலகி செல்ல மாட்டேன்

நீ ஒரு துளி எடுத்து சவரில் தெளித்தாலே ஓவியம்!!

குறுகிய சாலையில்
பூமரம் கண்டேன்.
நிலவை நோக்கி
கடலில் நீந்துவதா
நிழலில் நிற்பதா.
நேற்றோர் முடிவெடுத்தேன்
முயற்சிக்கிறேன்
முறிவேனோ தெரியவில்லை
முந்நூறு நாட்கள்
பின்பு காண்போம்

ஆயிரம் கவி எழுதினாலும்
அர்த்தம் ஒன்று தான்
எனக்கு உன்னை பிடிச்சிருக்கு
பிடிச்சிருக்கு
நிறைய நிறைய
நிறையா பிடிச்சிருக்கு

ஒரு நாளைக்கு நாலு வாட்டி பசிக்குது
எட்டு மணிநேரம் தூக்கம் வருது
தினமும் பொறுமையா பல்லு வேலக்கி
நிதானமா குளிக்றேன்
அரை மணிநேரம் பேப்பர் படிக்கறேன்
விட்டத்த பாத்து யோசிக்கிறேன்
யாருக்காது போன் பன்னி பேசறன்
இதேலான் நல்லாவா இருக்கு
வயசு பசங்க பன்ற காரியம் மாதிரி யார் இருக்கு

மழைத்துளி ஈரம் காற்றில் ஒட்டிக்கொள்ளும்
உன் சிரிப்பொலி என் நெஞ்சில் குடிகொள்ளும்

நேற்று நிலவை கண்டேன்
நிலவில் உன்னை கண்டேன் - உன்
நிழலில் என்னை கண்டேன்

ஆகாய வெண்ணிலாவில் அர்த்தமில்லை
அஹிம்சை முறையில் வெற்றியில்லை
உன் தாண்டவம் கண்டால் -தாரை
தாரையாய் கண்ணீர் வருகுதடி
உன்னுடன் ஆனந்தம் காண
மனம் ஏங்குதடி - மந்திரச்
சொல் உதிர்வாய்ப் பெண்ணே
மாலை இட்டுக் கொள்வோம்

ஓவியம் பழகலாம் காவியம் பழகலாம்
ஆனால் காதல் நீ இல்லாமல் பழக முடியுமோ ?