உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அதில் ஈரம் எஞ்சும்
- வைரமுத்து

அர்த்தமுள்ள இவ்வரிகளுக்கு என்னுள் உயிர் கொடுத்தவளே, உன்னை பற்றி .....

படித்திவிட்டு ...

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதல் என்றால்

Aug 31, 2011

August 2011

பயணம் துவங்கியது 
பச்சை தாவனியையை
பக்குவமாய் சிறிது இடை (ஆறு) 
தெரியும் அளவு உடுத்திக் கொண்டுள்ள
கேரளாவைக் காண வருகிறேன் 
அவளை கட்டிக்கொண்டு 
அங்கேயே இருந்து விடுவேனோ 
அல்லது மனம் கொண்டு காதல் கொண்டு 
கை விட்டு பிறகு விடு வந்து 
கவிதையாய் அழுவேனோ 
கேரளம் பதில் சொல்லும்


மலைகளில் மரமாய் இருந்தேன் 
மேகமாய் என்னை போர்த்திக்கொண்டு 
சுவாசம் தந்து பிறகு என்னை 
பிரிந்து சென்றது ஏனோ 


உன் வெள்ளிக் கொலுசு மணிகளை 
அருவியில் அள்ளி வீசினாயோ 


மழையே மழையே மாசில்லா மழையே 
காதலி மீதுப் பொழிகிறாயே 
காலம் போதுமோ 
வார்த்தை புரியவில்லை மொழி புரிகிறது இதன் பெயர் காதலோ?


ஒரு வாழ்வு 
அதனினுள் ஒரு பெண் 
எங்களுக்குள் காதல் கல்யாணம் காதல் 
எங்களுக்கு ஒரு குழந்தை
வாழ்க்கை செல்கிறது 
ஒரு நாள் குழந்தைக்கு கல்யாணம் 
என் மேல் தோள் சாய 
அவளுக்கு நேரம் கிடைக்கிறது
சில நாட்கள் கழித்து பேரப் பிள்ளைகள்

மறுபடியும் என்று அவள்   
என் மேல்
தோள் சாய்வாளோ ?    


அவளுக்கென்று ஒரு மனம் உண்டு
அதில் எனக்கென்று ஒரு இடம் உண்டு
அதற்கு ஒரு சாவி உண்டு
அது எங்கு ?


விழியோடு வழிந்த நீரை துடைத்து கொண்டேன்
மனதில் வடியும் குருதிதனை துடைக்க முடியவில்லை 


மழைத்துளிகளாய் இணைந்து  
சுந்தர அருவியாய் காட்சி தந்து
காதல் ஆறாய் நீண்டு  
அன்பெனும் கடலில் 
கலியாண படகில் 
செல்வோம் ஷ்வேதமே


நிற்காமல் பெய்வது மழையோ நினைவோ 
நனைந்து நனைந்து காய்ச்சல் வந்துவிட்டது


இதயத்  தாமரையே உன் இதழ்களில் 
தண்ணீர் துளிகளை தாங்குகிறாய் 
என் மென்மையான  மனதை தாங்க மாட்டாயோ   ?