உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அதில் ஈரம் எஞ்சும்
- வைரமுத்து

அர்த்தமுள்ள இவ்வரிகளுக்கு என்னுள் உயிர் கொடுத்தவளே, உன்னை பற்றி .....

படித்திவிட்டு ...

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதல் என்றால்

Jun 30, 2012

Dec 2011 June 2012



காதல் போய்
கவிதை போய்
உன்மீது கொண்ட
அன்பு மெய்


கோடையில் மாலையில்
மாமரத்து மரத்தடியில்
மல்லிகைப்பூ உன் தலையில்
மனம் ஏதென்று சொல்வேன்
மங்கை உனை மனதில் வைத்துக்கொண்டு


நீதான் காதல்
நீதான் வாழ்க்கை
இதற்கு மேல் வாழ்வில்
வேறொன்றும் இல்லை

என்ன காதல் இது
ஏதேதோ செய்கிறது
எதையும் செய்ய இதயம் துடிக்கிறது
என்றும் தாங்க கரங்கள் ஏங்குகிறது


விண்ணைத்தாண்டி வருவாயா
ஆசையாய் பேசுவாயா
விளையாட்டாய் முத்தம் தருவாயா
மேகமாய் குடை பிடிப்பாயா
குடைக்குள் மழை பொழிவாயா
என்னுடன் மழையில் நனைவாயா


மலர்ந்தும் வாடாத பூவே
என் மேல் விழ மறுப்பதென்ன


உன்மேல் விழுந்த மழைத் துளி
உன்னுள் இறங்கிவிட்டது
உன் பார்வை என்னுள் இறங்கிவிட்டது
பின் உனை பற்றி எழுதுகிறது

என் கைகள் கவிதைக்காக காத்திருக்கலாம்
நான் உனக்காக காத்திருக்கலாமோ ?


உன் விழி செய்த பார்வை
என்னை வீதியில் அலைய செய்தது


சிறப்பானது காதல்
சற்று சிந்தித்து  பார்
சில நாள் வாழ்ந்து பார்


உன் கரங்களில் படுத்து
உன் கைகளால் என் தலை பிடித்துகொண்டு
உன் மூக்கினால் உறசி எனை கொஞ்சும் போது
நான் படும் அவஸ்தை
சொல்லி மாளாது
சொன்னால் புரியாது
சொல்ல வார்த்தை நீ தரவில்லை
குழந்தை நான் புரிந்துகொள்


நேற்று அவளை கண்டதில்
மனம் நாணம் கொண்டதில்
நேற்றை மறந்தேன்
இன்று உயிர் திரும்பினேன்
கனவை கலைக்கிறேன்
புன்னகை புரிகிறேன்
கன்னத்தில் இரண்டு குழியடி
உன்னிடம் இருந்து திருடியதில் ஒன்று


உன் பார்வை ஒன்று போதும்
பயணம் உன்னுடன் என்று சொல்ல


அழகு என்று சொல்வதிற்கு
இடம் இல்லாமல் நீ அழகு


உடைந்த கண்ணாடியை ஒன்று சேர்க்க முடியாது ஆனால்
உடைந்த என் மனதை ஒன்று சேர்க்க உன்னால் மட்டும் முடியும்


பெண்ணே பரவசம் என்பது உன் பேச்சு
அதனை வாரி வாரி வழங்கு
அள்ளி அள்ளி வழங்கு
பருக காத்திருக்கிறேன்


அவள் இரு கரம் ஒரு விழி மறைத்தப்பின்
(அவள்) மறுவிழி கண்டேன்
அக்காட்சி உலக அழகு


நிற்காமல் எழுதும் என் பேனா
உன் மனதில் நீந்துமோ ?


உனக்காக காத்திருந்த காலங்களில் கவிதை எழுதியாச்சு
உன்னுடன் வாழும் நாட்களில் அதை பாடுவோம்


அவஸ்தை என்பது அழகு


முகவரி சொல்லாமல் சென்றவளே
முன்னின்று கொல்லாமல்
முகம் காட்டாமல் கொல்கிறாய்
முகவரி கிடைத்தும்
முகம் காண வரவில்லை
முகம் காண வருகிறேன்
புன்னகை புரிந்துவிடு ஷ்வேதமே


நீல வானம் கண்டு
வியந்து நிற்கையில்
வெண்மேகம் உன்னை பார்த்து
மயங்கி நின்றேன்
கார்மேகமாய் சூழ்ந்து
வெண்மணி பொழிவாய்


வெண் தாமரையே
உன் வெள்ளி வாள் வீசி
வேங்கை நான்
உன் மடியில் வீழ்ந்தேன்


எட்டுத்திக்கும் எட்டி பார்க்கும் என் கண்கள்
எல்லை இல்லா இன்பம் காண
என்னை தேடி வருவாய்
இன்பம் தருவாய்


தெய்வ திருமகளே
வாகை சூட வா
மன ஆடுகளத்தில் வேட்டையாடினாயே
மயக்கம் என்ன மைனா
உத்தம புத்திரன் நான் அடி
நண்பன் என்று நினைக்காதே
முரண் இல்லா போராளி


உள்ளத்தில் பெண் இருந்தால்
உலகம் ஒருபோதும் பத்தாது
கண் முன் பெண் இருந்தால்
காலம் செல்வது தெரியாது
கடைசிவரை அவள் இருந்தால்
வாழ்வில் தேவையேதும் இல்லாது
கனவில் அவள் காட்சி அளித்தால்
துயில் களைய பிடிக்காது
நிலவில் அவள் கால் பதித்தால்
உலகில் இருக்க எனக்கு பிடிக்காது


நிலவு உதிக்கையில்
நிஜம் மறந்து
நிந்தன் நினைவில்


உன் பெயரை GCHAT-இல் கண்ட பொது
உச்சி குளிர்ந்ததடி


புன்னகை முகமெங்கும்
பரவசம் மனமெங்கும்
நர்தனம் உடலெங்கும்
ஒளிவெள்ளம் கண்ணெங்கும்
கவிதைகள் கையெங்கும்
உனை காண்கையில்


ஆதலால் நாளும்
காட்சி தருவாய்
காதல் புரிவாய்
மனம் கொள்வாய்
மக்கள் பெறுவாய்


வினாகாலங்களுக்கு விடை கொடு
விழாகாலங்களுக்கு விடியல் கொடு
கனவு முழுவதும் கவி கொடு
காலம் முழுவதும் காதல் கொடு


அவள் முகம் தவிர மற்றவை யாவும் காண கடினமாய் உள்ளது


நாடோடியாய் செல்லும் என்னை
தென்றலாய் தழுவுபவளே
மாலையில் மேல்கிறாய்
கோடையில் கொல்கிறாய்
காலையில் துயிலை களைத்து
கனவை உண்மை செய்வாய்


களவு இல்லாமல் காவல் இல்லை
உன் இதயத்தை களவாண்டு காவல் செய்வேன்


என் விழயே நிலவே அமுதே
என் வழியே நடவே மனமே


"வெண் வண்ணத்துப்பூச்சியிர்க்கு" வண்ணகள் தீட்டிய கரங்களை பார்க்கையில் மனதில் வண்ணங்கள் பீற்றுகிறது


முகம் காணாமல் இருந்தேன்
உன் புகைப்படம் பார்த்தது
உன் மூச்சு காற்றை
சுவாசித்து போல்உள்ளது
- நன்றி முகபுத்தகம்
என் காதல் (மறுபடி) சொல்ல தேவையுண்டு


உன் விரல் நகம் கொல்லுமோ
உன் விழி கொல்லுமோ
முதலாவது மரணம்
இரண்டாவது ஜனனம்
இரண்டுமே பாக்கியம் தான்


பூ மலர்ந்தால் தும்பி மனம் மாறும்
உன் புன்னகை மலர்ந்தால் புவியியல் மாறும்
நானும் தான்


நான் உன் மேல் தூவிய
பூக்கள் சில
மரம் மேல் ஒட்டிக்கொண்டது


வீழ்வது அருவியோ
என் காதலோ
சிதறுகிறது என் நெஞ்சம்
சாரல் உன் மேல் படாதோ
உன் நெஞ்சம் குளிராதோ


உன் பெயரை உச்சரிக்கும் போது என்னுள் ஒரு கலவரம் மறுநிமிடம் ஒரு அமைதி அது ஏனோ ?


நினைவென்னடி பெண்ணே நீ இல்லாமல்?
நிலை குளைந்துள்ளேன் நீ இல்லாமல்
நீர்வீழ்ச்சியாய் என்மேல் பாய்வாய்
நில்லாமல் என்னுடன் பேசுவாய்
நித்திரை தனை தருவாய்
நின்கதியாய் நான் உள்ளேன் மறவாதே