உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அதில் ஈரம் எஞ்சும்
- வைரமுத்து

அர்த்தமுள்ள இவ்வரிகளுக்கு என்னுள் உயிர் கொடுத்தவளே, உன்னை பற்றி .....

படித்திவிட்டு ...

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதல் என்றால்

Dec 31, 2013

Dec 2013

மார்கழி மாத மாலையில்
கடற்கறை மணல் வெ ​ளியில்
லேசான மழைப் பெய்ந்து ஓய்ந்து
முழுப் பௌர்ணமி நிலவில்
கடல் வெள்ளிப் பாகாய் மினுமினுக்க
வலது பக்கம் நீ இருக்க
என் மன​மெல்லாம்​ ஒளி வீச

அலையொலியிலும் உன்
பேச்சொலி மட்டுமென் காதில் விழ
யாரை நோக்குவேன்
மிருதுவான ஈர மணலில் ஒவியம்
செதுக்கும் உன் பாதங்களைப் போல
என் மனதில் கவிதையை செதுக்கும்
உன் முகம் தனையே கண்ணே

Sep 23, 2013

Sep 2013

அடர்ந்த படர்ந்த மலைகளும் உன் பின்னால் சிறியதாய் தோன்றுமோ
ஆழ்க்கடலும் உன் அருகே குளமாய் தோன்றுமோ
நீல வானமும் உன் மேல் குடையாய் நிற்குமோ
அடை மழையும் உன் மேல் சாரலாய் சி்ந்துமோ
சூறாவளியும் உன் மூச்சுக் காற்றாய் வீசுமோ
உனக்காக சங்க இலக்கியமும் புது கவிதையாகுமோ
பூக்களும் உன்னுடன் பேசுமோ
சிட்டுக் குருவியும் உன்னுடன் பாடுமோ
என்னுடன் நீயும் கொஞ்சம் பேசுமோ

​​​பனித்துளிப் போல் தோன்றி மறையும் என்​ சிறு ​​வாழ்வில்
சில நிமிடம் உன் முகம் தனை காட்டிச் செல்வாய்

நீ எனை பார்த்துப் பூ போல் புன்னகை செய்தாலும்
என் நெஞ்சில் புயல் போல் கூதூகளம் கண்மணியே


Jun 1, 2013

June - Aug 2013

மங்கை அவள் கை பிடிக்க
மணவாளன் நெஞ்சம் நெகிழ
இருவர் முகத்திலும்
சற்றென்று புத்தடி புன்னகை

மழை நின்றபின் என்மேல்
பெய்யும் மரமே
பெய்வது காதலோ நினைவோ
தரையில் தேங்கியது வலியோ
அதில் நிந்துகிறேனோ
வசந்தம் வந்தால்
மலராய் சூடாயோ என்னை

இரு நீர் கண்ணாடியாய்ப் பிரிந்த நாம்
நான் நீராவியாய் ஆகும் முன்
ஷ்வேதமே நீர் வந்து சேரும்
இல்லையேல் நம் ஆவி சேருமென சொல்

மழை நீர் குளிர்கின்றதே
கடல் நீர் கரிகின்றதே
இளநீர் சுவைகின்றதே
கண்ணீர் சுடுகின்றதே
தண்ணீர் சுவைகின்றதே
இவை எல்லம் பெண்ணே உன்னாலே

மரம்போல் எழுந்தால்
வேர்போல் தாங்குவேன்
என் குல்மௌகரே

நெத்துச்சுட்டி பின் நெற்றிக்கண் மறைத்தவளே

உனக்காக காத்திருக்கும் என் தோள்களில்
உன் தலையிற்கு ஓய்வுகொடுப்பது அழகு 

May 31, 2013

Feb 2013 May 2013

இன்று கனவில் வந்தாய் எழுந்தேன்
நாளை வாழ்வில் வந்தால் வசப்படுவேன்.
வருவாயோ


​மழையாய் உயிர் தந்து
வெயிலாய் இதம் தந்து
என்னை பனியாய் கொன்றவளே
மழையாய் மறுபடியும்  பெய்யாயோ
              - செடி

​ஓடும் மேகம் நீயோ
அதனை தள்ளும்
காற்று நானோ ?

மூளையும் பயிர் நானோ
சிந்தும் மழை நீயோ

சங்க தமிழ் நீயோ
செம்பணி புலவர் நானோ

வானம் நீயோ
விண்ணோடு பேசும்
மைனா நானோ

நந்தவன பூக்கள் நீயோ
உம்மை சிறிது நேரம் சுமக்கும்
பூக்கூடை நானோ

மலைப்ரதேசம் நானோ
என்மேல் உறைந்து ஓய்வெடுக்கும்
மேககூட்டம் நீயோ
இதனை காண்பார் யாவரும்
நம்மை அழகு என்பார்
ஏன் இது உனக்கு புரியவில்லையா ?


அப்படி எதுக்கு உன்னை காதலிச்சேன்
இப்படி உன்ன பத்தி சிந்திப்பதற்கு
என்ன பாத்து ஒரு நொடி
நீ சிரிச்சா போதும்
ஒரு வாரம் முழுக்க
அதை நெனெச்சு இருப்பேன்
இரவுல கனவுல நீ வந்தா போதும்
அடுத்த இரண்டு நாள்
முக பிரகாசமா சிரிச்சின்னு இருப்பேன்
உன்னோடு இல்லாம நான்
எதுக்கு இந்த வாழ்க்கைய
அர்த்தமற்று வாழறன்
வித விதமா ஜிமிக்கி போட்டு
காலுக்கு வெள்ளி கொலுசு போட்டு
தல நிறைய பூ வெச்சு
நீ ஒம்போது கஜ மடிசார் கட்டி
நான் மயில் கண் வேஷ்டி கட்டி
பாலும் பழமும் உண்டு
பாவைகள் பாடல் பாட
ஊஞ்சலிலே நாம் ஆட
கெட்டி மேளம் இடி முழங்க
அட்சதை மழை பொழிய
கல்யாணம் பண்ணிக்கலாம் வெண்கமலமே
காலப்போக்கில் நம்
முக சுருக்கத்தில்
மெல்லிய அழகு கண்டு
கண்விழி வழி காதல் மாறி
புன்னகை பூமலரில்
காதல் செய்வோம்
பவழமல்லி பூத்துருச்சு
மல காத்து வீசிரிச்சு
மழைமேகம் கொட்டிரிச்சு
மழை பெஞ்ச மண்வாசம் அமிங்கிரிச்சு
ராசா ஏக்கம் குறையலையே
ஆனா மங்கை மனம் மாறலையே 

Jan 17, 2013

September 2012 January 2013

பன்னிரண்டு கண்ணாடி பேருந்தில் முப்பது பேர் இருந்தும் தனிமை தனிமையோ


மலர் தனை ரசிக்க யாரிடம் என்று கற்று கொண்டாயோ மனமே இப்பொழுது  எங்கு உள்ளாயோ

- மலர் தனை  ரசிக்க  கற்றுகொண்டோரிடம் என்னை பற்றி நினைவு கூர்வாய் மனமே


பார்க்காத நாட்கள் பார்வை யற்றவை
பேசாத நாட்கள் சுவை யற்றவை
நினைக்காத நாட்கள் உயிர் யற்றவை
நீ இல்லாத வாழ்க்கை பொருள் அற்றவை


சாலை செல்லும் பாதை மழை
நீ செல்லும் பாதை நான்


நுரையிரல் தாண்டிய உன் சுவாசம்
என் நெஞ்சம் தனை தாண்டவில்லை


உன்னை பற்றி பேச ஒரு போதும் உதடுகள் நிற்கவில்லை
உள்ளங்கள் பேச தடைவிதித்தது ஏனோ ?
கண்கள் காணமுடியாமல் செய்தது ஏனோ ?


மழை பேய்த போது மண்வாசம் நுரையிரளுக்கு சென்றது
உன் வாசம் என் மனதிற்கு சென்றது


மங்கையே உன் நினைவுகள் மர இலைகளில் இருந்து சிந்தும் தூத்தல் போல் சிலிர்க்கிறது


நான் வரைந்த வெண்ணிலா ஷ்வேதாம்பரம்


மலரே அவள் சுவாசம் உன் வாசமோ
என்னை மயக்குகிறது
மயங்குகிறேன்
எங்கு இருக்கிறாள் அவள்


கவிதை ஒன்று சொல்
என் காதில் மட்டும் சொல்
கற்பனையிலும் காணாதவற்றை சொல்
கமலமே உன் சிரிபோலியுடன் சொல்
என்னை சிதரவைக்கும் செந்தமிழ்ச் சொல்லைச் சொல்


உனக்காக நான் வாங்கிய பூக்கள்
என்னுடன் வாடுகின்றன
பூக்களை வாடவிடாதெ


என் இதயதை உன் இதயத்துடன் இணைக்க வைத்தியரை வரச்சொல்லவா ?
அந்த சிகிச்சை எனக்கு ஆனந்த சிகிச்சை ஷ்வேதா ?


மெல்லிய தூறல் முள்ளாய் தீண்டியதே
நீ அருகில் இல்லாத பொழுது


ஒரு மாதம் பிறகும் பௌர்ணமி ஒரு நாள் தான்
ஒரு கணம் உன்னுடன் ஆயினும் வாழ்வெங்கும் ஒளிவெள்ளம்


நீ பார்க்காத என் இதயம் இருந்தும் பயன் என்னடி


இரு கண் கொண்ட நிலவே
இருதயம் கொள்ளாதது ஏனோ
இரு ஆண்டு இசைக்காதது ஏனோ
ஈகை செய்துவிடு
இரு மனம் சேர்த்துவிடு
என்னுடன் திருமணம் புரிந்துவிடு


இரு கண் கொண்ட நிலவே
இதுவரை என்னை காணமல்
கொல்வது  யேனோ

கடவுளாய் வந்து காட்சி தந்தருள்வாய்
மனைவியாய் வந்து மாணிக்க வாழ்க்கையருள்வாய்
மழலையாய் வந்து அப்பா என்றழைப்பாய்யோ


கொஞ்சி கொஞ்சி பார்க்க வேண்டிய உன்னை
நான் அஞ்சி அஞ்சி பார்க்கிறேன்


உன் பெயரை  கண்டால் நான் படும் கொண்டாட்டம்
உன்னை காணாமல் நான் படும் திண்டாட்டம்
உனக்கு தெரியுமா ஷ்வேதா ?


ஒரு விழி கொல்லுதே
அதே இடத்தில
இரு விழி புதைக்குதே


உன்னோடு வாழாத வாழ்க்கை வேறும் கடலில் வசிப்பது உள்ளது