உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அதில் ஈரம் எஞ்சும்
- வைரமுத்து

அர்த்தமுள்ள இவ்வரிகளுக்கு என்னுள் உயிர் கொடுத்தவளே, உன்னை பற்றி .....

படித்திவிட்டு ...

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதல் என்றால்

Mar 29, 2011

புயலுக்குப் பின் அமைதி


உன்னால் என்னுள் கருவாயிருந்த கவிஞனை கை பிடித்தாயோ? 
சில யுகமாய் கவிதை எழுதவில்லை!

வியந்தேன் வியந்தேன் வியந்தேன்
வியக்க வியக்க வியந்தேன்
என்னுள் என்ன விந்தை செய்தாய் என வியந்தேன்
விடியும் வரை வியந்தேன்

விண்ணில் வெண்ணிலாவை கண்டு வியந்தேன்
வெண்ணிலவை உன் குண்டலமாய் கண்டு வியந்தேன்

விண்ணிலிருந்து விழும் பூக்களை கண்டு வியந்தேன் 
அவை உன்னக்கென என்பதை உணர்ந்து வியந்தேன் 

வானவிலின் வண்ணங்கள் கண்டு வியந்தேன்
அவ்வண்ணங்கள் உன் கூந்தலில் மிளிர்வதை கண்டு வியந்தேன் 

வாரணங்களின் தந்தங்கள் கண்டு வியந்தேன்
வஞ்சியே உன் கை விரல்கள் கண்டு வியந்தேன்

வேகமாய் சிறகடிக்கும் பறவைகள் கண்டு வியந்தேன்
பெண்ணே உன் இமைகள் சிமிட்டுவதை கண்டு வியந்தேன்

வனத்தில் பசுமை கண்டு வியந்தேன்
வஞ்சியே உன் அமைதி கண்டு வியந்தேன்

வாயிலில் திண்ணை கண்டு வியந்தேன்
திண்ணையில் நாம் பழகிய காலம் கண்டு வியந்தேன்

விடியலில் செவ்வானத்தை கண்டு வியந்தேன்
உன் துயில் களைத்ததற்கு கோபம் கொண்டாயோ என வியந்தேன்
அல்லது வேங்கை என் வருகையில் வெட்கம் கொண்டாயோ என வியந்தேன்

வீதியில் நாம் நடந்ததை வியந்தேன் 
என் வாழ்க்கையில் வசந்தமாய் வந்தாயே! வியந்தேன்!

வையத்தில் வானி(ணி) உனை வியந்தேன்
என்னுள் ஏன் என வியந்தேன்!

ஊர்ல அவன் அவன் ஆயிரம் Onsiteபோறான். அஞ்சு வருஷம் கழிச்சி மொத(முதல்)  Onsite கொரியா வந்து முதல் Testing  நான் பட்றப்பாடு இருக்கே ... அய்அய்அய்யோ

கவிதையும் வரவில்லை காதலும் வரவில்லை 
கலைமானே கண் மூடினால் உன் கண்கள் தான் கனவில் வருகிறது!

மச்சான் அழுக அழுகையா வருது டா

மச்சி அழுக அழுகையா வருது டி
ஓஹ்யோன் ஓஹ்யோன் ஓஹ்யோன் 

மௌனம்

இடியுடன் கூடிய மழை


இயந்திரமாய் இருந்த என்னை இயக்கிவிட்டாய் 
இயங்குகிறேன். இயங்காமல் இருக்க முடியவில்லை 

மயிலிறகு உன் மென்மையை உணர உன் மேல் வீசும் அடி  

உன் மென்மையை உணர பூக்களுக்கு உன் தலையில் இடம் கொடு. 
உன் மனதில் எனக்கோர் இடம் கொடு

என்னிடம் இருந்து விலகி இருந்தால் நான் உன்னை நினைக்க மாட்டேன் என்று நினைத்தாய் அடி. நான் யானை அடி. உன் நினைவொன்றே வாழ்நாள் முழுவதும் அதிர்வுகள் தரும். நீ என்னை கடந்து செல்கையில் என்னை நினைப்பாய். நான் இல்லாத பொழுதும் என் பேருந்து நிறுத்தத்தில் என்னை நினைப்பாய். என்னை நீ மறக்க மாட்டாய். உன்னை மறவேன் என்று நினைத்தாயோ. 
(Now I am incepted in your thought. It will grow. You cant stop)(note: on elephant. Trumpeting will reach long distances and elephants can sense even low freq. that is why if there is problem they trump)

உன்னோடு நான் கண்ட பந்தம் மண்ணோடு மழை கொண்ட சொந்தம் 
காய்ந்தாலும் அதில் ஈரம் எஞ்சும் - வைரமுத்து

கடல் ஒன்று அலைகள் நூறாயிரம் 
நீ ஒருத்தி உன் நினைவுகள் பல்லாயிரம்

காலை பகல் இன்றி ஊர் ஊராய் சுற்றும் மேகங்கள் பூவுலகத்தை காப்பது போல் உன்னை காப்பேன் 

மேகம் கூற்று: 
என் நிழல் கூட என்னில் ஓட்ட வில்லை அடி. உன்மேல்(உலகம்) விழுகிறது 

என்னுள் இருந்தவனை வெளியேற்றி 
நீ உள்ளே சென்றாய் 

இன்று அவள் இடம் சொல்வேன்

என்னை சுற்றி உள்ள மனிதர்கள் எப்படி உன்னை விட்டு வைத்திருக்கிறார்கள், என்னக்காகவா ?

பண்பட்டவனும் படகில் பயணம் செய்தால் பள்ளத்தில் இறங்குவானடி 

தீபத்தில் திரியாய் இருப்பேன் அடி 
என்னை சுட்டாலும் உனக்கு உணவு கொடுப்பேன் அடி 
நாம் இருவரும் ஒரே தருணத்தில் உயிர் துறப்போம் அடி 
உன் தந்தை தன் தீபத்தில் இருந்து என்னில் ஏற்றும் நாள் எப்பொழுது

எறும்பு நீ மழையில் நனைந்தால் நான் காளானாக முளைப்பெனடி

யாரிடமும் தோன்றவில்லை 

நேற்று என்னை கொள்ளை கொண்ட உன் மௌனம்
இன்று என்னை தீக்குழம்பாய்சுட்டெரிக்குதடி

சிறு துளி வெள்ளம் கண்ணில் கரைந்ததடி 

நீ மழலையாய் இருந்த போது வடித்த கண்ணீர் கடலோ ?

விளைவறியாது பூவுலகத்தில் பிறந்த ஒவ்வோர்வரும் காதலிக்கணும். 

கவிதைகள் எழுதினேன் அடி 
உன் கண்களை எழுத முடியவில்லை. 

கண்மூடினாலும் கனவுகள் தோன்றவில்லை 
உன் கண்களே தோன்றுகிறது 

"forgot", "I didn't think you like that",  "let us be friends", "I am sorry. Don't know what actions of me made you think  like that …"… 
ஹா... ஹா... ஹா... 
யாரிடம் டபாய்க்கிறாய் ? மௌனம் சாதிக்கிறாய். 
வானம் பொழிகிறது பூமி விளைகிறது 
உன்னை என் அடி காதலித்தேன் அடி?
 ஜோக் அடித்தாயா? 
பாட்டு பாடினாயா?
உன்னை என் அடி காதலித்தேன் அடி?
அல்லது பக்கத்து வீட்டில் 25yrs இருந்தாயா?
பள்ளியில் 14yrs படித்தாயா ? 
Coaching centre'la 2yrs படித்தாயா? 
கல்லூரியில் 4yrs படித்தாயா? 
அல்லது எங்கள் ஆத்து கொலுவிற்கு வந்தாயா?
அல்லது கல்லூரியில் எனக்கு உடம்பு சரி இல்லாத போது சாம்பார் சாதம் கொடுத்தாயா?
அல்லது Chicken Pox போட்ட போது எனக்கு Record Work செய்து Notes சேகரித்து கொடுத்தாயா? 
அல்லது முதல் அலுவகத்தில் ஆட்டு மந்தையாக பத்து கல்லூரியில் இருந்து வந்த பெண்களில் ஒரு பெண்ணாக என்னுடன் Trainingஇல்  வந்தாயா?
அல்லது projectஇல்  late night dinnerஇல் ஒரு medium pizza பகிர்ந்துக் கொண்டாயோ ?
பிறகேனடி உன்னை காதலித்தேன் ?
அல்லது கொஞ்சி கொஞ்சி நான் வயோலின் வாசிக்கும் பொழுது தாளம் போட்டாயோ?  
மாமன் பொண்ணா? அத்தை பெண்ணா? 
ஏனடி காதலித்தேன் 
மௌனத்தால் மனதை திருடிவிட்டாய் அடி. 

நினைவில் கொள் இனி உன் நினைவில் நான் வருவேன் 

என்னுள் இருந்தவன் என்னுள் எங்கிருக்கிறான் ?

மயில் இறகில் எரிமலை தீ குழம்பை தொட்டு வரைந்தானோ உன்னை ... அனல் அடிக்கிறது 

நாடு கடந்து நடுகடல் மேல் நடுவானில் நடுநிசியில் நட்சத்திரங்களை கண்டாலும் நின்னை நினைப்பேன் அடி சகியே!

கண்ணாடியை உடைத்தாலும் உன் முகங்கள் அதிகரித்தன
நீ இல்லை என்று சொன்னாலும் உன் மீது அன்பு கூடுகிறது

உலகம் சிறியது வா என்னுடன் 
இருவரும் சேர்ந்து ஊர் சுற்றலாம் 
சத்திரத்தில் நம் உறவுமுறை கேட்கலாம் 
அவர்களுக்காக தாலி கட்டிக்கொண்டு கலியாணம் செய்து கொள்ளலாம் 
மற்றபடி கலியாணம் என்பது இந்த சமூகத்துக்கு ஒரு ரூபாய் தாள் 

என்ன செய்தேன் உன்னுள் என் மேல் அன்பு மலர்ந்தது? என்றாய்
எதுவும் செய்யவில்லை அடி 
அதை தான் நானும் வியக்கிறேன் 

இதயத்தில் ஓர் ஹிமயமலையை வைத்தேன் அடி
என்னுள் இருந்த ஐம்புலன்களும் செயல் படவில்லை அடி 
அப்படி ஆனால் வையகத்திருக்கு Ra"'வாக நடமாடுபவன் யார்?
  
எனக்கேன் உன்னை படைத்தவன் 
ஏனடி உலகத்தை படைதான்

ஜோவென்று பெய்கிறது மழை 
என் கண் முன் செந்தழல் ஜோதியாய் நீ இருந்தால்
நான் மழையை காண்பேனா என்ன?

அடை மழையிலும் உன் இதய துடிப்பு கேட்கிறது 

மேக கம்பளத்தில் நடந்து நட்சத்திரங்களை எட்டிப்பிடிப்போம், என்னுடன் வா.

சாலையில் நடந்தாலும் சோலையில் நடந்தாலும் சின்ன பெண்ணே அன்று சில்லென்ற மழையில் உன்னுடன் நடந்தது தான் நினைவில் உள்ளதடி!

இருபத்தைந்து ஆண்டுகள் கொண்ட உறக்கப் பழக்கத்தை இருபத்தைந்து மணி நேரத்தில்மாற்றிக்கொண்டேன் இரு இருபத்தைந்து வாரங்கள் பழகிய உன்னை ஒரு மணி நேரம் கூடநினைவில் கொள்ளாமல் இருக்க முடியவில்லை! என்ன மாயம் செய்தாய்? 

சந்தித்த பொழுது சிந்திக்கவில்லை 
சிந்திக்கும் பொழுது சந்திக்கவில்லை

உனை காண இரு கண்கள், உன் பேச்சை கேட்க இரு செவிகள், உன் கூந்தலின் மணம் அறிய இரு (மூக்கு)தவாரங்கள், உனை காதலிக்க மட்டும் ஓர் மனம் போதுமா? ஒரு வேளை உன் குழந்தையாக உன்னை நேசிப்பேனோ ? 

மரணத்திடம் மண்டறாடி, என்னை உன் மன மேடையில் சேர்க்கும் படி கேட்பேன்

எப்பவுமே சிரிச்ச முகமா அதுவும் ஐயர் ஆத்து பாஷை பேசும்போது சொக்க்ரா டா

மேகம் நீ சிந்திய நட்சத்திரங்கள் என் மேல் வீசுதடி 
குடையில் ஒட்டி கொண்ட முத்துக்கள் உன் மேல் சிந்த வேண்டியவை. என் அடி தடுத்தாய் 
or
முத்துக்கள் உன் குடைமேல் ஒட்டிக்கொண்டுள்ளன. பார்த்துக்கொள் நீ குடையை மடக்கும் பொழுது உன்னை சிறை பிடித்து விட போகிறது 
or
உனை கட்டிக் கொள்ள முத்துக்கள் குடை மேல் காத்திருகின்றன, சற்று எச்சரிக்கையாய் இரு 

வண்ண வண்ணமாய் கண்கள் சிவக்க தலையில் குல்லா போடாமல் சின்னதாய் சொக்காப் போட்டு கொரியா பெண்கள் வந்தாலும் கண்ணே காலமெல்லாம் உன்னுடன் தானடி 

தேனே நான் தென்றலில் நனைந்தேன் அடி, 
புயலாய் என்னைக் கொள்ளை கொள்ளும் நாள் எப்பொழுது ? 

மறக்க மாட்டார்கள் இன்னும் அதிகமாக தான் நேசிப்பார்கள் 

பல பெண்களை பார்க்கும் எனக்கு நீ மட்டும் மனதில் இருக்கிறாய் 

தண்ணீரில் அமர்ந்த (வெண்)தாமரையே, சிற்றெறும்பு நான் பல்லாயிரம் ஆண்டுகள் பின் தும்பி ஆனேன். என் மொட்டே, என் கண் பாராய், உனை கை விட மாட்டேன் அடி 

நான் கலவாண்டாள் அது உன் மனதாய் இருக்கும்

தரணியில் தஞ்சம் புகுந்தவன் நின்னில் நெஞ்சம் தொலைத்தேன் சகியே!

உனக்காக காத்திருக்கையில் என் கால்கள் எல்லாம் ஆலமரமாய் நிற்குதடி 

சிந்தையில் உன் சித்திரம் தீட்டினேன் 
செந்தமிழே என்றும் உனை மறவேன் 

அன்பு உன் பண்பு  
வெளிச்சம் உன் முகம் 
வெண்மை உன் மனம்
அழகு உன் கூந்தல்
கொள்ளைஅழகு உன் கண்கள் 
அழகிய வளைவுகள் உன் காதில் 
தந்தம் உன் கைகள் 
அம்பு உன் பார்வை 
மழலை உன் பேச்சு 
மணம் உன் மூச்சு காற்று 
ஒளி உன் மதி
ஒலி உன் கை விரல் சொடுக்கு 
நிலவில் உன் ஓய்வு 
வையகம் உன் காலடி 
நடுநிசி உன் உறக்கம் 
அமைதி உன் நியதி 
கள்ளம் உன் உள்ளம் 
தங்கம் உன் எண்ணம்  
சுருதி உன் மூச்சு
தாளம் உன் இதய துடிப்பு 
தென்றல் உன் பேச்சு 
புயல் உன் சிரிப்பு 
தமிழ் உன் தாய்மொழி
முத்துக்கள் உன் உடன் என் நாட்கள் 
நான் உன் சேவகன்
என் காலம் உன் அருகில் 
உன் உள்ளம் என் பாக்கியம் 
நேற்று உன் சிரிப்பு 
இன்று உன் அமைதி 
நாளை உன்னுடன் நம் வாழ்க்கை 

உன்னை காணும் போது கண்கள் உறைந்தன

நேற்று நினைக்கவில்லை இன்று உன்னை எழுதுவேன் என்று 

நேற்று பிறந்த போது
இன்று சந்திப்பேன் என 
நினைக்கவில்லை 

நேற்று சந்தித்த போது
இன்று நினைப்பேன் என 
நினைக்கவில்லை 

நேற்று நினைத்த போது
இன்று பழகுவேன் என 
நினைக்கவில்லை 

நேற்று பழகிய போது
இன்று யாசிப்பேன் என 
நினைக்கவில்லை 

நேற்று யாசித்த போது
இன்று நேசிப்பேன் என 
நினைக்கவில்லை 

நேற்று பயணத்தை தொடங்கிய போது
இன்று உன்னை சந்திப்பேன் என 
நினைக்கவில்லை 

நேற்று உன் பெயரை கேட்ட போது
இன்று மனத்திலும் உதட்டிலும் முணுமுணுப்பேன் என 
நினைக்கவில்லை 

நேற்று உறங்கிய போது
இன்று விழிப்பேன் என 
நினைக்கவில்லை 

நேற்று உன்னுடன் இருந்த போது
இன்று பிரிவேன் என 
நினைக்கவில்லை 

நேற்று நிலவொளியில் உன் நிழலை கண்ட போது
இன்று நித்திரையில் வருவாய் என 
நினைக்கவில்லை 

இன்று நினைத்தேன் 
நாளை மரணத்திலும் உன்னை நினைத்திருப்பேன் என்று 

இரு நிலவில் ஓர் நிலவு இல்லை என்றதும் மற்றோர் நிலவு சிதைந்து நட்சத்திரங்கள் ஆனது
சிறு துளி 
தேன் துளி 
உன் பேச்சு 

தொப்புள்க் கோடி வரை தாய்
அருகில் தோழி
தொலைவில் காதலி 
மடியில் மனைவி 
மார்பில் மகள்!

மிளகாயே! - பார்த்தால் அழகாய் சிவப்பாய் மெலிதாய் இருக்கிறாய் 
கடித்தால் சுளிரென்று உரைக்கிறாய், 
முதலில் சுளிரென்றாலும் பிறகு சுகமாய் உள்ளதடி!

யாரும் பேசாத மொழியினை என்னுடன் பேசுகிறாய்
அர்த்தம் புரியவில்லை 
ஆனால் அதன் சங்கீதம் சுகமாய் இருக்கிறது 

நிசப்தம் என்னும் எட்டாவது ஸ்வரமாய் உன்னை உணர்ந்தேன் 

உன் தேன் சுவை அறிய கூடாது என்பதற்காக தண்ணீரில் அமர்ந்தாய். எறும்பு நான் பல்லாயிரம் ஆண்டுகளாக பல உருவம் மாற்றி கொண்டு தேனியாய் ஆனேன் அடி 
மூடிகொண்டு இருக்கும் தாமரை மோட்டே என் கண் பாறை உன்னை கை விடமாட்டேன் 

தண்ணீரில் அமர்ந்தாய் தாமரையே. சிற்றெறும்பு நான் பல்லாயிரம் ஆண்டுகளாய் தும்பி ஆனேன்
என் மொட்டே என் கண் பாராய்
உன்னை கை விடமாட்டேன் 

மேகம் நீ சிந்திய நட்சத்திரங்கள் சில்லென்று என்மேல் வீசுதடி. என்ன சுகம் 

என் களஞ்சியத்தில் ஓர் மாணிக்கம் நீ 

கடமையோ புதுவையில்
வேலையோ சுவோனில்
நினைவோ டில்லியில் 
என் செய்வேன் அடி 

கடல் கடந்து வந்தாலும்
காதல் குறையவில்லை 
கண்மணியே என் நவமணியே 
என் மேல் காதல் கொள்ளடி

பல பெண்களை பார்க்கும் எனக்கு நீ மட்டும்
மனதில் இருக்கிறாய் 
உன்னுடன் கொண்ட பழக்கம் 
கொரியா'வில்லும் தொடர்கிறது - ரயிலில் தூங்கவில்லை 

இரவில் வந்தாலும் பௌர்ணமியாய் வருகிறாய் 

துன்பம் நேர்கையில் நீ துயில்
கொள்ளும் அழகை கண்டால் 
துன்பம் எல்லாம் துண்டு துண்டாகிவிடும்  

என் செவியில் உன் வார்த்தைகள் முத்தமிட்ட போதெல்லாம் என்னை மறந்தேன் 

தரணியில் தஞ்சம் புகுந்தவன் 
நின்னில் நெஞ்சம் தொலைத்தேன் சகியே 

நான் களவாண்டால் அது உன் மனதாய் மட்டும் இருக்கும் 

நித்திரை கலைப்பாளாம்   நித்திரா 
சுயநினைவை களைத்தாய் அடி ஷ்வேதா

உனக்காக காத்திருக்கையில் கால்கள் எல்லாம் ஆலமரமாய் நிற்குதடி 

ஓடையில் நீர் கலங்கினாலும் உன் முகத்தின் பிம்பத்தில் களங்கம் இல்லை  

சிந்தையில் உன் சித்திரம் தீட்டினேன் 
செந்தமிழே உனை மறவேன் அடி 

முத்தத்தை சத்தம் இல்லாமல் கொடுப்பார்கள்
நீ பேசுவதே முத்தமிடுவது போல் உள்ளது 

நீ இருக்கும் பூவுலகை காக்க சிலந்தியாய் வலை பின்னுவேன் அடி 

காதலித்துப்பார் காலம் சிறிது என்று புரியும்

காத்திருந்துப்பார் காதல் எவ்வளவு சுகம் என்று புரியும் 

என் காதலை அறிய என் எழுதுக்கோல் சிந்திய நதியில் பயணம் செய்து பார் 

விண்ணில் நிலவில்லை பெண்ணே உலகில் நீயில்லை 

எவ்வுலகிலும் மழலைகள் நடுவீதியில் கூச்சலிட்டு அடம்பிடிப்பது போல் நீயும் அடம்பிடிக்கிறாய் ஆனால் அமைதியாக 

கலைமானே என் கண் பாரடி 
பட்டாம்பூச்சி என்னில் பற்றுக்கொள்ளடி
தாமரையே என் விரல்கள் பிடித்து தவழடி 
பைங்கிளியே என் மீது பைத்தியம் கொள்ளடி

கலைமானே என் கண் பாரடி 
சுவரில் வரைந்த சித்திரமே என் செவி சாய்ப்பாய் 

ரத்தினமே என் ரகசியமாய் காதலி 
லயமே என்னில் லய்-யடி 

விண்ணே என் முன்னே வா 
தமிழே என் தர்மப்பத்தினியே  

உனக்காக அழமாட்டேன் உன்னுடன் மடிவேன் 

பருவ மழை தொடர்கிறது


மழையே யார் மீது காதல் இப்படி பொழிகிறாய்

ஏ மைனா அந்த நொடி நீ நானென்றால் நான் ஜென்ம சாபல்யம் அடைந்திருப்பேன் 

தலைவன் கூற்று 

விண் மேகத்தை போர்த்திக் கொள்ள 
போர்வைக்குள்ளே வலதும் 
இடதுமென அலைமோதியது திங்கள் 
மேகம் கலையாதோ திங்கள் தன்னை 
காணாதோ - எண்ணினான் ஞாயிறு 

உன் அருகே நான் மரமாக இருப்பேன். ஏனெனில் உன் நிழல் என்னிழலில் கலக்கும். என் வேர்கள் கால்களடி. உன்னை பின்தொடரும். நம் நிழல்கள் பிரியாது.   

தண்ணீரில் கோலம் போடும் விரல்களை என்ன செய்யலாம் 

நில் கவனி செல் என்று வாகனம் செல்லும் பாதையில் சாலை சந்திப்பு விளக்கை வைத்தான் (வாகனத்தை மனிதன் படைத்தான்).. ஆனால் பாவை பின் செல்லும் மனதிற்கு ஏன் மனதை படைத்தவன் வைக்கவில்லை (ரா" சாலை சந்திப்பில் இருந்து) (Ra" from traffic signal)

சமூத்திரத்தில் மழை பெய்தாலும் உன் முகம் கலங்கவில்லை 

நிலவில் ஹீலியம். காரணம் நீயடி. உன் கால் அடி பட்டு ஹீலியம் உருவாகிற்று 

பேசாமல் கொல்கிறாய். சிரித்தால் சித்தரவதை செய்கிறாய். பேசினால் என்ன ஆவேனோ 

நீ எனக்கு அறிமுகம் ஆகி ஆறாவது மாதம் உன் பற்கள் தெரிந்தன. இப்போது ஓர் ஆண்டு ஆகிறது. இப்பொழுதும் எல்லோரையும் வேற்று மனிதர்களாய் பார்க்கிறாய். ஆனால் என்னை அடையாளம் தெரிந்து கொள்கிறாய். ஓர் ஆண்டு  ஆயிற்றே சற்று நன்றாய் பேசுகிறாய் . ஆம் அவ்வப்போது 'ஆம்', 'உம்', 'ஹ்ம்ம்' என்று பேசுகிறாய். நீ (உன்னை) நான் ஈன்றெடுத்த மழலை என்று நினைத்தாயோ ?

நீ குளித்த குளத்தில் பவளத்தாமரைகள்  பார்க்கிறேன். வெண்தாமரைகள்  நாணத்தினால் பவளமாயிட்றோ ?  

உன் நினைவாலே நான் கட்டிய 
தேன் கூட்டை முன் இதயம் 
இருந்த இடத்தில் வைத்தேன்
உன் நினைவாலே வாழ்கிறேன் 

என்ன செய்வதென்று அறியாமால் (எதை) எதையோ செய்கிறேன்

எதிரே அவள் இருக்கையில், எள் அளவும் இமை அசையவில்லை. அவள் காதோடு பேச வேண்டியவற்றை கண்ணோடு பேசுகிறேன்  

நீ கடிக்கும் கரும்பு தன் இனிப்பை உன் பற்கள் இடம் சரணடயவைத்து சமர்பித்தும் விடுகின்றன

வீணை மீட்கும் ஒலியை உன் பற்கள் உரசுவதில் கேட்கிறேன் 

தினமும் முப்பது நாழிகை உன் நிழலை ஆதவன் களவாடுகிறான்... இதனை நீ அறிவாயா? 
(முப்பது நாழிகை - > இரவை கூறினேன்) 

கேள்வி தெரியாமால் விடை தேடுகிறேன் 

காலையில் புத்தகத்தை படித்தாலும் நீ பேசிய வார்த்தைகள் தான் கேட்குதடி

உன் பாத சுவடை கொள்ளை கொள்ள கடலை படைத்தானோ 

சப்பாத்தி மாவுல கொஞ்ஜோண்டு   ஒட்ன மாதிரி ஒரு மூக்க வெச்சுனு  தூங்கறா. தூங்கும் போது கூட அடக்கமா கைய கட்டினு தூங்கறா பாரேன். பாரேன் தூங்கினே அபிநயம் செய்யறா.

மௌனமே உன்னிடம் மௌனம் பழகக் கற்றுக்கொள்ளும். நீ கைக்கட்டி உறங்கினாலும் கடுகளவும் உன் மௌனம் குறையவில்லை . எப்படி பெண்ணே? ஏன் பெண்ணே? 

நான் பேருந்தில் ஏறியவுடன் நித்திரா தேவி ஆக்கிரமிப்பாள் என்று நீ என்னை ஆக்ரமித்தாயோ அன்று முதல் இரவில் கூட அவள் என் அருகில் வருவது இல்லையடி. ஆனால் உன்னை ஏன் இப்பொழுது ஆக்கிரமித்தாள். 

அவள் உள்ளே குளிர்சாதன அறையில் இருக்கிறாள். அந்தி மழை வானம் அர்த்தமில்லாமல் பொழிகிறது.

உணவகத்தில் குடைக்காக காத்திருந்தேன். எனது அருகாமையில் இருந்த ஊழியை என்னுடன் வந்தாள். ஆனால் 'அவள்'உடன் நடப்பது போன்றே எண்ணம். பாதி வழியில் ஊழியையின் 'அவன்' வந்தான். பிறகு தனியே கனவு கண்டுக்கொண்டே சென்றேன் 

மணலின் குற்று: நதியே (நீ செல்லும் பாதை எல்லாம் உன் முன் இருப்பேன்) என்னுடன் என் ஒரு வினாடி கூட நின்று பேசவில்லையே நீ?

முற்பிறவியில் நாம் முத்தம்மிட்டு கொண்ட சுவடுகள் நட்சத்திரங்கள். 

மரணம் சாலையில் சந்தித்தது 
நீ என் மனதில் இருப்பதை 
கண்டு பின் வாங்கியது 
சற்றும் கவலை இல்லையடி

உன்னுடன் உடன் பிறவா நோக்கமென்ன

மின்னும் உன்முகத்தை உனக்கு காண்பிக்க தக தகவென் ஓர் சூரியனை படைத்தான். அது அச்சப்பட்டு ஓரிடத்தில் நிற்காமல் பல நிறங்களில் உருவெடுத்து சுழல்கிறது 

உன் சிரிப்பில் மழலையை கண்டு மதி மயங்கி என் மனத்துக்கண் அகத்தை கண்டேன் 

பெண்ணே உன் மௌனத்தை கண்டு மனம் நர்த்தனம் ஆடுதடி

உன் இரு விரல்களின் இடுக்கில் கன்னத்தின் மழலை சதையை மெதுவாக பிடித்துகொண்டாய். எனக்கு வலிக்குதடி 

கண் கொட்டாமல் பார்க்கிறேன் கவிதை ஏதும் வரவில்லையடி!

என்னை உலகம் வேகமாய் சுற்றிக்கொண்டு இருக்கிறது நான் எதிரே உள்ள அலைகடலை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறேன்

என்ன செய்வதென்று அறியாமால் எதை எதையோ செய்கிறேன்

விண்ணில் உன்னுடன் செல்ல ஆசை அடி. உன்னுடனும் வரவும் அனுமதிக்க வில்லை. விண்ணிலும் செல்லவும் சந்தர்ப்பம் தற்பொழுது இல்லையடி. 

மனதில் எழும் கேள்விகளுக்கு விடையளிக்க யாரும் இங்கு இல்லை 

இலக்கணம் அறியேன் இலக்கியம் அறியேன். ஆனால் சற்று கவிதை மட்டும் வருகிறதடி. அதுவும் உன்னால். 

நான் துயிலில் இருப்பது போல் இருந்த பொழுது நீ "ரா"" என்று என்னை அழைத்தாய். அப்பொழுது, தாய் உறக்கத்தில் இருந்த போது கருவில் இருந்த குழந்தை 'அம்மா' என்று அழைத்த போது அந்த தாய் உணர்ந்த பரவசத்தை உணர்ந்தேன். 

எண்ணில்லா மழை துளிகளில் என் எண்ணத்தை வைத்தேன், மழை துளிகளில் என் எண்ணங்களை வைத்தேன். மழையில் நனையடி. உன் மேல் சிந்தும் முதல் தூல்லிலேயே என்னை உணர்வாய்  

உன் கையில் இருக்கும் இலை என்ன பாக்கியம் செய்ததடி 

நான் இன்று அவளை பிரிவதே அவளுடன் சேர்வதற்கு தான் 

உலகம் என் சூரியனை சுற்றுகிறது? நான் என் உன்னை நினைக்கிறேன்? 

மதுரையிலும் உன் முகம் மறவேன் அடி சகியே 

உனது பெயரை மணலில் எழுதினேன் அலை அள்ளிக்கொண்டது . மனதில் எழுதினேன் குருதியில் கலந்துவிட்டது. என்னுள் எங்கும் நிறைந்துவிட்டாய். 

மல்லிகையின் நறுமணம் உணர முடியவில்லை. ஏன் மனதில் வெள்ளை கமலம் தான் வீசுகிறது 

உன் கண்களில் கோடான கோடி காப்பியங்கள் எழுதி இருந்தால் படித்து முடித்திருப்பேன் அடி .

எட்டுத்தொகையிலும் உன்னை எழுதவில்லை, எண்ணிப் பார்க்கிறேன் அதை ஏன் இப்படி மெச்சி கொள்கிறார்கள் (என்று).

உனக்காக காத்திருக்கையில் மழையும் வெட்பமாய் வீசுகிறது 

உதகைக்கு சென்றாய் உதகை உருகியது. இமயத்திற்கு சென்றாய் இமயம் இடிந்தது. உன் அமைதியை கண்டோ? 

நாம் விட்ட மூச்சு கலந்தது நம் மனம் எப்போது கலப்பது?

புல்லின் கூற்று: மழையில் சிறந்த துளியான உன்னை சிறை பிடித்து 
வெயிலில் மின்ன செய்து மடலாடுவேன்(உன்னை உலகிற்கும் காண்பிப்பேன்) 

சம்பங்கியே நீ படர என்னை கொடுத்தேன் 
என்னில் படர்ந்தாய் என நினைத்தேன் 
ஆனால் என்னை சிறை பிடித்துவிட்டாய் 

சம்பங்கியே உன் நர்தனத்தில் லயிக்கையில் படர்ந்தாய் 
சில நாள் கழித்து உணர்ந்தேன் நான் இவ்வுலகில் இல்லை.
நீ என்னை சிறை பிடித்துவிட்டாய். மீள முடியவில்லை. 
எனினும் உன் அரவணைப்பில் வாழ்வதே பேரானந்தம்

தூங்கறா பாரேன். தோடு மட்டும் ஆடுது 

என்னால் தாங்க முடியவில்லை, பொறுக்கமுடியவில்லை. போதும் பெண்ணே எழுந்திரு. நான் ஒவ்வொரு கணம் பார்க்கையில் வெவ்வேறு கோணத்தில் உறங்குகிறாய். ஒவ்வொன்றிலும் உன்னை என் குழந்தாய் போல் உணர்ந்தேன் அருகில் இருந்து மயில் இறகால் விசிறாமல் போயிற்றே 

எனக்கென்று ஒரு மனம் அவள் இருக்கையை நாடுகையில் 
என் கௌரவம் என்னை தடுக்கிறது 

உண்டதும் உறங்குபவன். உன்னை என்னுள் உணர்ந்த பிறகு எங்கேடி உறக்கம்? 

எண்ணி எண்ணி பார்த்தால் எண்ணங்களில் எல்லாம் நீ தான் டி 

கருவிலே பத்து மாதம். பள்ளியில் பன்னிரண்டு ஆண்டு. கல்லூரியில் நான்கு ஆண்டு. கல்லூரியில் நான்கு ஆண்டு. உன்னுடன் மட்டும் வாழ்நாள் முழுவதும்.

உன் முகம் காணாமல் உறக்கமில்லை. நீ இல்லாமல் வாழ்வுண்டோ?

காரணமில்லாமல் கண்மூடித்தனமாய் உன்னை யாசிக்கிறேன் நேசிக்கிறேன்  காதலிக்கிறேன் 

உலகு: நிலவே என்னை உன் நிழல் என நினைத்தாயோ? என்னை பின் தொடர்கிறாய் 

நீ உறங்கும் பொழுது கணக்கில்லா நட்சத்திரங்கள் கண் கொட்டாமல்/இமைக்காமல் உன்னை காவல் காக்கின்றன. ஏனடி ?

உன் புன்சிரிப்பில் புலனைந்தும் புலப்படவில்லை 

தரணியில் தண்ணீர் இல்லையென்றாலும் பரவாயில்லை  
தங்கமே தாமரையே நீ இருந்தால் போதும் 
யாரிடமும் தோன்றவில்லை 
பலருடன் தோன்றிய உடன் மடிந்த காதல் 
உன்னுடன் உனக்காக மலர்ந்தது 

கண் முன்னும் நீ 
கண் மூடினாலும் நீ 
கண்ணே என் கண்ணா நீ 

விதைக்குள் விருட்சம் 
என்னுள் நீ 

"தீக்குள் விரலை விட்டால் நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா  நந்தலாலா" என்றான் "பாரதி". பொய்யடி உன்னை நெருங்கவே முடியாது 

தேய்ந்தாலும் நிலா அழகு தான் 

நொடியில் ஓர் கவிதை என்றால் உன் சிரிப்பு 

உன் வேர்வை என்ன பனி கட்டியில் இருந்து வடிந்த துளியோ? இப்படி சுடுகிறது 
(when I placed my hand on bus window in which she placed her hand, after she got down)

சொல்லில் குற்றமோ 
சொல்லிய விதத்தில் குற்றமோ 
பொருளில் குற்றமோ 
கூறியவனில் குற்றமோ 

பிரிந்த சாலைகள் மறுபடியும் ஓர் இடத்தில் ஒன்று சேரும் 

மின்சாரமாய் உடம்பில் ஒவ்வொரு அணுவாய் ஓடுகிறாய். வீட்டில் மின்சாரம் இருந்தும் துயில் இல்லையடி  

பருவ மழை


மழையோடு நனைய குடையோடு சென்றேன் 

நான் மேகமாக இருந்தால் உன் மேல் மழையாய் பொழிந்து உன் வெட்பத்தை அணைப்பேன் 

அவள் என் அருகில் இருந்தால் மேகம் என் அருகில் இருப்பதுபோல் உணர்ந்தேன். சற்று தொலைவில் இருந்தால் நான் செயலற்று இருந்தேன் 

உன்னருகில் என்னை உணர்ந்தேன், என்னுள் உன்னை உணர்ந்தேன் 

என்னுடன் உரையாடாமல் கூட இரு ஆனால் என் அருகில் இரு 

மறவாதே நீ என்னை விட்டு விலகும் போது என் சுவாசத்தை எடுத்து  செல்கிறாய்.விரைவில் வந்து விடு ஏனெனில் என் இதயத்திற்கு தெரியும் நீ தான் என் ஸ்வாசமென்று ஆனால் என் நுரையீரலுக்கு அது தெரியாது  

தண்ணீரில் உள்ள நுண்கிருமிகள் விழிகளுக்கு தென்படுகின்றன ஆனால் உன் பார்வையின் அர்த்தம் புலப்படவில்லை

சில இரட்டையர்களுக்கு உடலை ஒன்றாக இணைத்து படைக்கிறான், ஏன் உனது இதயத்தை என் இதயத்துடன் இணைத்து என் உடலிற்குள் வைத்து படைக்க கூடாது . 

நீ நிற்கும் இடத்தில நான் பூக்கள் பொழியும் மரமாக இருப்பேன் 

கடல் சங்கினில் அலையோசை கேட்கும். என் இதயத்தில் நீ என்னிடம் பேசிய வார்த்தைகள் தான் ஒலிக்கும் 

சந்திரனும் சூரியனும் நேர் நேரே சந்தித்துகொள்வது வைர மோதிரத்தை அணிந்துகொள்ளத்தான் 

நான் பேருந்தில் உறங்கும் பழக்கத்தை வேருடன் களைந்தவளே  நீ தான் 

உன்னை இன்றி யார் என்னை காதலிக்க முடியும்

ஆறாக நீ இருந்தால்  கரையாக இருபுறமும் இருப்பேன் 

என்று முடியும் இந்த வேள்வி 

இந்த பூவுலகத்தை படித்தவன் எனக்கென்று புதையல் படைத்தான் என்றால்  அது நீ தான் 

நீ உறங்கும் பொழுது தலை அசைக்கும் லயத்தை ரசித்தேன். அது ஆதி தாளமா அல்லது ரூபக தாளமா

உங்க அப்பாவுக்கு என்ன புடிச்சிருக்கும்
உங்க அம்மாவுக்கு என்ன புடிச்சிருக்கும்
உங்க பாட்டிக்கு என்ன புடிச்சிருக்கும்
உங்க மாமா தாத்தாவிருக்கு என்ன புடிச்சிருக்கும்
நம்ம மகிழ்ச்சியா வாழலாம் 
இது நல்லா  வரும்
இது நடக்கும்

குளத்தில் குனிந்து பார்த்தால்
உன் முகம் தெரிகிறது

உன் விரல்களை பார்த்தால் குழந்தைகள் எனக்கு ஞாபகத்திருக்கு வருகின்றன 

'ரா"' என்று என் துயிலை களைவாள் என்றால் நான் நிமிடங்கள் உறங்குவேன் (அவள் உறங்கும் பொழுது பேருந்து அவள் நிறுத்தகத்திற்கு சிறிது தொலைவில் இருந்து உறங்குவேன்) 

நாளும் உன்னுடன் பேருந்தில் பயணிக்கும் வழியில் இன்று நீ இல்லாமல் பயணிக்கும் பொழுது இவ்வழியில் முதல் முறை பயணிப்பதுபோல் உணர்கிறேன் 

நான் பிள்ளை போலே, என் பிஞ்சு விரல்களை உன் கையுடன் கோர்த்து, துள்ளிக்கொண்டே நடக்க வேண்டும் 

மண் வாசம்


உலகத்துல அவ்வளவு நகரம் இருந்தும் நான் ஏன் டெல்லிக்கு வந்தேன் ? டெல்லியில் அவ்வளவு இடங்கள் இருந்தும் நான் ஏன் ஜனக்புரி வந்தேன்? ஜனக்புரியில் இரண்டு பேருந்துகள் இருக்கும்போது நான் ஏன் நான்காம் எண்   பேருந்தில் வருகிறேன்? எனக்கு பிறகு அத்தனை பேர் ஏறும்பொழுது நான் ஏன் ர.கா'க்கு பிறகு ஏற வேண்டும் ?

அவள் உறங்கும் போது நான் கண் இமைக்க மாட்டேன். ஏனெனில் அப்பொழுது தான் தைரியமாக அவள் கண்களை எதிர்க்கொள்ள முடியும். 
(I can touch the live wire only when there is no electricity)


ஆழ்ந்த உறக்கம்
லயித்து போகும் பேரமைதி


கொள்ளை கொள்ளும் அமைதி
நெஞ்சை கொள்ளை கொள்ளும் பேரமைதி
அவள் முகம்தனில் குடிகொண்டு உள்ளது


ஆடி வரும் தேன் துயில் கொள்ளும் அழகையே வையகத்தில் பரவசம் என்று எண்ணிணேன். அது தவறல்ல எனினும் மற்றுமோர் பரவசத்தை உணர்ந்தேன் இன்று.

மழைச் சாரல்


உள்ளமது பள்ளந்தனிலே அவள் வீழ்ந்தால் உன்னை காப்பாற்ற இயலாது 


சாய்ந்த நெற்கதிர் பூமித்தாயை முத்தமிட்டு முத்தமிட்டு மீள்வது போல் சிரம் கீழும் மேலும் தேர் போல் ஆடியது.  எங்கே ஜன்னலை தொடுமோ என்று (உடுக்கை இழந்தவன் கை போல்) என் கரங்கள் சிரத்தை தடுக்க காத்திருந்தன. 


குடைக்குள்ளே மழை பெய்தால் நான் என்ன செய்வேன் மகனே.
(குடை - வானம்)