உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அதில் ஈரம் எஞ்சும்
- வைரமுத்து

அர்த்தமுள்ள இவ்வரிகளுக்கு என்னுள் உயிர் கொடுத்தவளே, உன்னை பற்றி .....

படித்திவிட்டு ...

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதல் என்றால்

Jun 30, 2011

June 2011

கனவாய் உள்ளது
உன்மேல் காதலாய் உள்ளது


கனவுகளை காற்றோடு கடத்தி சென்றாயோ
கவிதைகளை கட்டிக்கொள்வாயோ
கண்மலரே காண வருகிறேன்


நேற்று நிலவோடு இருந்தாயோ?
இன்று நிலவாய் வருகிறாய்
நினைவில் கொள்கிறாய்
நெஞ்சம் நெகிழ்கிறாய்
நற்றமிழே நறுமுகையே
நேசிப்போம் வா


காட்சிகள் அனைத்தும் கனவாய் உள்ளதடி
கண் முன்னே கனவுகள் தோன்றுதடி
கமலமே கண் விழித்தாலும் உன் முகம்தான்
காலம் கடந்து செல்லும் காவியம் வேண்டாம்
காவியம் சொல்லும் கயல்விழி போதும்
உன் காமம் வேண்டும்
(குறிப்பு: குறுந்தொகை, திருக்குறள் போன்ற நூல்களில் காமம் காதலை மேற்கோள் காட்டும்)


விண்ணில் எங்கு செல்லபோகிறோம்
நாம் சந்திக்கத்தான்


நினைப்பது ஒன்று
நடப்பது ஒன்று
நிழல் ஒன்று
நிஜம் ஒன்று
என் நினைவு ஒன்று
அது நீ தான் அடி


மார்கழி மாதத்தில் குற்றாலத்தில் குளித்தால் எப்படி இருக்கும்?
அப்படி உள்ளதடி உன்னிடம் பேசுவது
உறைந்து விடுகிறேன்
பின்பு நடுங்குகிறேன்
ஆனால் புத்துணர்ச்சியாய் உள்ளது


வாழ்வில் பெண்ணிருந்தால்
உலகமும் மறந்து விடும்
உன் மேல் பேதைமை கொண்டால்
ஞானமும்  மங்கி விடும்
உன் பெயர் உச்சரித்தால்
கானமும் சுவைத்து விடும்
உன் விழி நோக்கினால்
இதயமும் நின்று விடும்
உன் சொல் கேட்டால்
நரம்புகளும் அடங்கி விடும்
உன் விரல் பட்டால்
ஊனும் கல்லாகிவிடும்


நினைத்தபொழுது நட்சத்திரங்கள் தெரிந்தால் நெஞ்சத்தில் காதல் என்று அர்த்தம்


சுவாசிப்பதும் உன்னை நேசிப்பதும் என்னை அறியாமல் நடக்கிறது


வாழ்வில் வண்ண வண்ணமாய் வசந்தங்கள் வீச எமது வாழ்த்துக்கள்.


நட்சத்திரப் பந்தலில்
வெண்ணிலா தீபம் கொண்டு
சூரிய வேள்வி முன்
திருமணம் செய்து கொள்வோம்
என் சகியே


விண்ணில் இடித்தாலும் விரிசல் விழுவதில்லை
பெண்ணே  மின்னலாய் தோன்றினாய் தூரல்கள் விழுந்தன
இடியாய் இடித்தாய் கவிதை மழையாய் பொழிகிறது


வேதனையில் சோலையில் சென்றால் வெயிலும் வேதாந்தம் பாடும்  (இது ஷ்வேதா பற்றியது அல்ல)


பிரிவென்பது இரவா
     பகல் எங்கே
மனமென்பது மேகமா
     மழை எங்கே
மெளனமென்பது மொழியா
     சொற்கள் எங்கே


நேரம் வரும் வேளை
நெருங்கி வருமோ
இளைப்பாற நிழல் தருமோ


பார்க்க ஆனந்தம்
பேச ஆனந்தம்
பழக ஆனந்தம்
சிரிக்க ஆனந்தம்
சண்டை ஆனந்தம்
கேட்க ஆனந்தம்
நினைப்பது ஆனந்தம்
நெகிழ்வது ஆனந்தம்
வாழ்வது பேரானந்தம்


காற்றில் ஆடும் கொடியின்  மனம் மகிழ்ச்சி கொள்ளுமோ துயர் கொள்ளுமோ


எத்தனை நாட்கள் பேசாமல் இருப்பாய்
     ஒரு நாள் என்னுடன் பேசுவாய்
அன்று உன்னுடன் பேச
     ஆவலாய் காத்திருக்கிறேன்


அன்பே என் நெஞ்சே
     ஆருயிர் சகியே
ஆர்பரிக்கும் அமைதி கொண்டவளே

      அழகாய் சிரிப்பவளே
மழலையாய் உறங்குபவளே
       மனம் நெகிழச் செய்பவளே

நித்திரை நேரம் குறைத்தவளே
        சித்திரை மாத சூரியனே
பரவசமே பாவையே
        என்னை ஏற்றுக்கொள்


உனை தாலாட்ட உள்ளங்கைகள்  போதுமா?      


கரங்கள் பிடித்து நந்தவனத்தில் செல்ல காத்திருக்கிறேன்


எத்தனை நாட்கள் கழித்து வானவில்லை பார்க்கிறேன்
ஏதேதோ எண்ணங்கள் தோன்றுகிறது


உன் அன்பு பஞ்சாய் வெடித்து என மேல் வீசுவது என்றோ ?


நீ மலரா? கொடியா?
ஓடையா? நதியா?
நிழலா? மரமா?
மழையா? இடியா?
வானமா? மேகமா?
என் அன்பா? காதலா?


வார்த்தை இருந்தால் உன்னை பற்றி பல வரிகள் எழுதுவேன்
ஒரு வார்த்தை சொல்லிவிடு வண்ண வண்ணமாய்
வரைந்திடுவோம் வாழ்ந்திடுவோம் நம் வாழ்க்கையை


நாம் இணையும் போது
மகிழ்ச்சியில் மத்தியில்
மௌனம் குடிக்கொள்ளும்


பேதைமை கண்டால் பாவை நீ காரணம்


எண்ணங்களை எழுத முடியவில்லை
காதலியையை காதலிக்க முடியவில்லை


பார்க்கும் முகம் அனைத்திலும்
      பாவை முகம் தெரிந்தால்
பார்த்திபன் அப்பாவை மீது
      பேதைமை கொண்டுள்ளான்
பராசக்தியே பாவையே
      பார்த்திபனை காண்பாய்


மெல்லிய மலரில் மேக நிழல் வீழ்கிறதே, புரியவில்லையா?


செல்ல மழையே உன்னில் நனைய உன் அனுமதி வேண்டுமா?


எழுதிய வரிகளின் நீளம்
நாம் வாழ்வின் நாட்களில் ஒன்று
தனியாய் எழுதமுடியவில்லை
தாமரையே  வா


இரவு கடற்க்கரை சாலையில்
மின் விளக்குகளின் வெளிச்சத்தில்
நானும் அவளும் நடப்பதை
கற்பனை செய்தேன்
அவ்வளவு அழகு


எமது திண்ணையில் சாய்ந்து கொள்ளும் தூணாய் இருப்பாய்
சாய்ந்து கொண்டு இருக்கும் பொழுது உயிர் துறவோமோ


நாட்களை தனியே நான் எண்ணுகிறேன்
நட்சத்திரங்களை எண்ண என்னுடன் வா


தாமரையே தாமரையாய் இருக்கிறாய்! அழகா?


அழும் குழந்தையின் வாய் மூடாதே