உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அதில் ஈரம் எஞ்சும்
- வைரமுத்து

அர்த்தமுள்ள இவ்வரிகளுக்கு என்னுள் உயிர் கொடுத்தவளே, உன்னை பற்றி .....

படித்திவிட்டு ...

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதல் என்றால்

Jul 31, 2011

July 2011

மலையில் ஆங்காங்கே துளித் துளியாய்
பச்சையாய் துளிர்த்துள்ள
செடிகள் கொடிகள் நினைவுகள்.
சற்று தொலைவில் இருந்து
காணுகையில் அவை காதல்.
செழிப்பாய் உள்ளது சுகமாய் உள்ளது
வா இங்கு குடிகொள்வோம்


சுவாசம் கொண்டு வந்தவள்
நேசம் விதைத்தாள்
என்று அறுவடை செய்வாளோ


மின்சார கம்பியில் மழை பெய்தும் குளிராதவன்
மலர் கொடியே தவழ்கிறாய் மலர்கிறாய்
என்னால் ஏதும் செய்ய முடியவில்லை


உறவுகள் தொடரவில்லை
உறக்கம் தொடரவில்லை
ஒவ்வொரு பொழுதும்
உன் பெயர் மறக்கவில்லை


நினைவுகள் குறையவில்லை
நெஞ்சம் கொள்ளவில்லை
சில காலமாய்
கவிதை எழுதவில்லை


உதடுகளில் சொற்களில்லை  
சொற்களில் பிழையில்லை
நெடுங் காலமாய்
உன் முகம் இல்லை


நேசித்த பொழுது
மனம் சொல்லவில்லை
நெஞ்சம் கூறுகையில்
நங்கை ஏற்கவில்லை
பின் பேச உன் மனம் இரங்கவில்லை


நீ ஆம் என்று சொல்லும் நொடியில் இருந்து
ஒரு நொடி கால் தரையில் நிற்காது
ஒரு நொடி வாய் சிரிப்பதை நிறுத்தாது
ஒரு நாள் கண் உறங்காது
ஒரு நாள் முகம் செந்நிறம் இழக்காது
ஒரு நாள் சரீரம் ஆடாமல் இருக்காது
ஒரு நாள் மூளை சிந்திக்காது
ஒரு நாள் என்னை பிடிக்க முடியாது
ஒரு யுகம்  மனதில் கவலை எழாது
அந்த நொடி என்றடி ஷ்வேதா (என்றடா ராஜேஷ்)??