உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அதில் ஈரம் எஞ்சும்
- வைரமுத்து

அர்த்தமுள்ள இவ்வரிகளுக்கு என்னுள் உயிர் கொடுத்தவளே, உன்னை பற்றி .....

படித்திவிட்டு ...

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதல் என்றால்

Apr 30, 2011

April 2011

வாழ்க்கை எளிமையானது
உன்னுடன் அழகானது


எமது பயணம் சிறப்பாய் இருந்தது
அவளையும் பார்த்திருந்தால் அழகாய் இருந்திருக்கும்


சுந்தரச் சித்திரமாய் வந்த பெண்ணே
சிறகுடன் வா
செவ்வானம் தாண்டிச்  செல்வோம் வா
செழுமையான வாழ்க்கை காண்போம்


என் சுவாசக் காற்று அவள் சிந்தையில்
செல்லமாய் சுட்டியாய்
ஒரு கொட்டு
 கொட்டியதால்
அவள் விழித்தெழுந்தாளோ?


பேரொளியுள்ள உன் புன்னகையை எதிர்த்துப் போராடப் போராளியில்லை
ஒலியில்லா உன் புன்னகைக்கு எதிரொலி உண்டு
என்றென்றும் பேணிப் பார்த்துக்கொள்கிறேன் என்னிடம் கொடுத்துவிடு
தொட்டுவிடுவேனோ என்று நினைத்தாயோ தொலைவிலேயே நிறுத்திவிட்டாய்
தொல்லை தர மாட்டேன் தொண்டாற்றிக் கடன் தீர்க்கிறேன்
தங்கத் தாமரையே இனியும் தாமதம் செய்யாதே


தங்கத் தமிழச்சியே  தரணியில் வந்தவளே
தாமரைப்பூ குளத்தில் தவழ்பவளே
நெஞ்சத்தில் நேசம் விதைத்தவளே
நெருங்கி வந்த பொழுது நெருப்பாய்க் கொதித்தாயே!


என் நெஞ்சம் காணும் வாழ்க்கை
உன் கையில் உள்ளது
உன்னைக் கைப் பிடித்துச் செல்ல
கரங்கள் காத்திருக்கின்றன
காலம் சென்றாலும் - அவை
கனவுகளை எடுத்துச் செல்லவில்லை
என் கனவுகள் கற்பனைகள் அன்று
உன்னுடன் கண்ட வாழ்க்கை
கண்ட கனவுகளைக் காண
வாழ்நாள் போதாது
போதிய காலம் இல்லை
பொன் மகளே வா!
பூஞ்சோலையில் காத்திருக்கிறேன்
பௌர்ணமிக்குள் வா!!
கனவுகளைக் கொண்டாடலாம்.


கண்ணீர் கலந்து கடல் நீர் கரித்ததோ?
சுவாசம் முகர்ந்து பூக்கள் மலர்ந்தனவோ
உரை கேட்டுக் கிளிகள் பேசினவோ
நீ விழித்ததனால் கதிரவன் உதித்தானோ?


கடலில் முழ்கி மறைந்தாலும்
மலையின் பின் மறைந்தாலும்
கண்ணே நீ என்னை நினைத்த
மறு கணம் உதிப்பேன்


மாசியிலும் ஐப்பசியிலும் மழை
மனம் குளிரச் செய்யும் - மங்கையே
உன் சிரிப்பொலியைச் சொன்னேன்


காற்றின் பருவம் அறிந்து பூக்கள் மலரும்

என் மனம் உணர்ந்து நீ மொழிவாயோ ??