உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அதில் ஈரம் எஞ்சும்
- வைரமுத்து

அர்த்தமுள்ள இவ்வரிகளுக்கு என்னுள் உயிர் கொடுத்தவளே, உன்னை பற்றி .....

படித்திவிட்டு ...

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதல் என்றால்

Apr 1, 2011

மருதம்

இலைகள் துளிர்ந்து
விழிகள் விரிந்து
மனம் மகிழ்ச்சி கொள்ளட்டும்

பூக்கள் மலர்ந்து
சுவாசம் முகர்ந்து
மனம் மகிழ்ச்சி கொள்ளட்டும்

கிளிகள் பேசி
செவிகள் சிவந்து
மனம் மகிழ்ச்சி கொள்ளட்டும்

மழலைகள் சிரித்து
உதடுகள் விரிந்து
மனம் மகிழ்ச்சி கொள்ளட்டும்

நாம் கைகோர்த்து
மனங்கள் இணைந்து
நமது உள்ளம் பரவசம் கொள்ளட்டும்

கருப்பு வெள்ளை
கருப்பு வெள்ளை
கருப்பு வெள்ளைகளில் நான்
துள்ளி துள்ளி வருகையில்
இருபுறமும் நின்று வழி விடுவார்கள்

ஆனால் நீ
கருப்பு வெள்ளை
கருப்பு வெள்ளை
கருப்பு வெள்ளை என்று
நிற்காமல் விழி அசைக்கிறாய்
விழியில் வீழ்ந்தேன்
இனி என்னில் வலுவில்லை
நல் விடை கொடு ஷ்வேதமே

ஓர் காவியம் தரும் அணைத்து இன்ப துன்பங்களையும் உன் பெயர் தருகிறது
இச்சுந்தர காவியத்தை (உன் பெயரை) வாசிக்கிறேன்,  சுவாசிக்கிறேன், உச்சரிக்கிறேன் கணக்கில்லாமல்
ஆயினும் இன்று வரை உன்னை புரிந்துகொள்ள முடியவில்லை கமலமே!

என்ன எழுதுவது என்று அறியேன்
எதை எழுதுவது என்று அறியேன்
எண்ணி பார்க்கிறேன் எதுவும் தோன்றவில்லை
இப்புலம்பலையும் எழுதுகிறேன்
தேரில் வந்தாயே தாமாரையே எப்பொழுதும் சூரியனை நோக்கிக்கொண்டு
உன் புன்சிரிப்பில் புலனைந்தும் நின்றதடி
இடைவேலி நம் மனதிற்கு மட்டும் அல்ல
மேகத்திற்கும் கடலிற்கும் தான்

மேகத்துள் மறைந்து கொண்ட நீரை போல்
இவ்வலையுகத்தில் மறைந்து கொண்டேன் அடா