உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அதில் ஈரம் எஞ்சும்
- வைரமுத்து

அர்த்தமுள்ள இவ்வரிகளுக்கு என்னுள் உயிர் கொடுத்தவளே, உன்னை பற்றி .....

படித்திவிட்டு ...

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதல் என்றால்

Apr 1, 2011

முல்லை

உன் நிழல் இந்த வலையில் விழ என்ன பேறு செய்ததோ

மாலை அவள் வரவில்லை
மனம் இம்மெய்தனை ஏற்கவில்லை
மதி இயங்கவில்லை
மணமகள் மணவாளனை மெச்சிக் கொள்ளவில்லை
மனித குலத்தில் மற்றவர் யாவும் பிடிக்கவில்லை

செல்லும் இடம் எங்கும் எட்டுத்திசையிலும் எட்டிப்பார்க்கிறது என் கண்கள்.

உன் கையில் கையால் ஒரு பிடி சோறு கிடைக்குமா கண்மணியே?

மணமறியாது குணமறியாது உண்கிறேனடி
வானமறியாது பூமியறியாது குதிக்கிறேனடி
பாசமறியாது நேசமறியாது பழகுகிறேனடி
மொழியறியாது எழுத்தறியாது பேசுகிறேனடி
ராகமறியாது தாளமறியாது பாடுகிறேனடி
மழையறியாது வானவில் அறியாது மயிலாய் ஆடினேனடி
இரவறியாது பகலறியாது மழலையாய் இருக்கிறேனடி ஷ்வேதமே!

பார்ப்பதில்லை பார்ப்பதில்லை பாறேங்கிலும் உன்னை பார்ப்பதில்லை
நோக்குவதில்லை நோக்குவதில்லை ஒரு நொடி கூட உன்னை எதிரே நோக்குவதில்லை
பேசுவதில்லை பேசுவதில்லை உன்னுடன் மனதிற்குள் பேசுவதில்லை
கேட்பதில்லை கேட்பதில்லை உன் சுந்தர தமிழ்தனை கேட்பதில்லை
உண்ணுவதில்லை உண்ணுவதில்லை உன்னை நினைத்துக்கொண்டு உண்ணுவதில்லை
செய்வதில்லை செய்வதில்லை உன்னை பற்றிய சிந்தனையோடு ஒரு வேலையும் செய்வதில்லை
நித்திரையில்லை நித்திரையில்லை நின்னை நினைத்துக்கொண்டு நித்திரையில்லை
எழுதுவதில்லை எழுதுவதில்லை உன்னை பற்றி ஒரு கவி கூட எழுதுவதில்லை
தேடுவதில்லை தேடுவதில்லை கடை ஊழியர் அடையாள அட்டையில் உன் பெயர் தேடுவதில்லை
கொள்வதில்லை கொள்வதில்லை வெண்கமலத்தின் மேல் காதல் கொள்வதில்லை
சொல்வதில்லை சொல்வதில்லை இனி ஒரு பொய்யும் சொல்வதில்லை

என் இதயத்தை எடுத்து ஒரு வினாடி(விநாடி) காகிதத்தில் வைத்தால் உன் முகம்தனை ஓவியமாய் காண்பாய்

கார்மேகமாய் கனவில் நினைத்துக்கொள் அடை மழையாய் வீசுவேன்
கருங்குயிலாய் கனவில் நினைத்துக்கொள் கானமாய் இசைப்பேன்
களவாணியாய் கனவில் நினைத்துக்கொள் உன் மனதை களவாண்டு விடுவேன்
காதலனாய் கனவில் நினைத்துக்கொள் உன் பாது காவலனாயும் இருப்பேன்

கால்கள் கடக்கும் இடங்களை(மற்றும் நாட்களை)  பயணம் என்றால், மனம் சுற்றும் நாட்களை என்னவென்று கூறுவாய் ?

(தபுக்குனு பேசினு/தூங்கினு இருக்கும் போது தாலிய கற்றது ஓல்ட் பேஷன்)
உங்க அப்பாக்கிட்ட பேச ::: நறுக்குன்னு ரத்தம் வர மாதிரி உன் உச்சம் தலைல கொட்டினா உங்க அப்பா வந்து என் கிட்ட பேசுவாருல ??....

என் கவிதை புரியவில்லை என்றாலும் முன்பு போல் என்னுடன் பேசுகிறாய்
என் காதல் புரியவில்லை என்றாலும் என்னுடன் முன்பு போல் போல் பேசடி

கண்களை மூடி கொண்டு கண்களை பறித்துகொண்டாய்
மனதை உள் வைத்துக்கொண்டு என் மனதை பறித்துகொண்டாய் தாமரையே!

கண்களை மூடி கொண்டு கண்களை பறித்துகொண்டாய்
மனதை உள் வைத்துக்கொண்டு  என் மனதை பறித்துகொண்டாய் தாமரையே!
இது தகுமோ? இது முறையோ? இது தர்மம் தானோ?

பல பேர் இருந்தா எல்லார்கிட்டையும் பேசி புரியவெச்சு ஒர்த்தவங்க கிட்ட சம்மதம் வாங்கறதுக்கு நிறைய நேரம் ஆகும்.
அதே, ஒன்னே ஒன்னு இருந்தா அவங்க கிட்ட பேசி புரியவெச்சு பழகறதுக்கு நிறைய நேரம் இருக்கும். தினமும் இதை போன்ற மனப்பான்மையோடு ஒர்த்தவங்கள நினைச்சுனு இருந்தா கண்டிப்பா அவுங்க உங்களுக்கு கிடைப்பாங்க.நாளை சந்திப்போமா

எனக்காக உனது விழியில் ஒரு துளி என்றால்
மரண படுக்கையிலும் உறங்குவேன் கண்மணியே

உன்மேல் சொட்டுச் சொட்டாய் சிந்துதடி வானம்
சொன்னால் நம்புவாயோ? ஒவ்வோர் துளியிலும் அன்பை கலந்துளேன் அடி

முதலில் நட்பை இழக்க கற்றுக்கொண்ட பிறகு காதலியிங்கள்

மாதமோ தை 
இந்நேரமோ மெய்
உன் கோபம்மோ பொய் 

மழலையை ரசித்தேனே மனம் சரிந்தேனே

அவரவர் வாழ்க்கையில் அவரவர் பயணிப்போம் என்றாள், ஆயினும் வாழ்க்கை என்பது யாதென அறியேன் நானே, விடைதேடி வந்தேன் இங்கே. கிட்டுமா என்று சற்றுப் பொருத்திருந்து பார்ப்போம்

வெள்ளிக்கம்பலத்தில் வெண்ணிலா மிதந்து வந்தால்(வந்தாள்)
வேங்கை அவன் காதல் கொள்வானோ
காவியம் எழுதுவானோ அவள்
கயல்விழி கதை சொல்லுமோ
காலம் பதில் சொல்லுமோ

அடைமழை கண்டேன் அனல்குளிர் கண்டேன்
ஆயினும் அன்பே நின் அன்பின் கண்ட பரவசம் இவையில் காணோம்

வெண் தாமரையே வாஞ்சி நிலவே
திருவாய் மலர்வாய்

வைரப் பாலைவனத்தில் நிற்கும்
கருகிய முற்களில் இலை துளிராதோ
காட்டுத்தனமாய் துளிரும்
நம்பிக்கையுடன் சுவாசிக்கிறேன் நறுமுகையே

உணர்ந்த தருணமே இழந்தேன்
என் நெஞ்சம் எங்கேன அறிவாயோ?

எங்கிருந்து வந்தாய்
எமலோகத்தில் இருந்து வந்தாயோ
இப்படி கொல்கிறாய்

மழைத்துளி பனித்துளியை சுட்டதடி
பனி மெல்ல கறைந்து மடிந்ததடி
மேகம் அழுது மடிந்ததடி
மழையே உருக்கொண்ட மேகமுடன் சேரவில்லை
பனியிடமும் சேரவில்லை
நீரோடையாய் எங்குசெல்கிறாய் கண்மணியே