உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அதில் ஈரம் எஞ்சும்
- வைரமுத்து

அர்த்தமுள்ள இவ்வரிகளுக்கு என்னுள் உயிர் கொடுத்தவளே, உன்னை பற்றி .....

படித்திவிட்டு ...

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதல் என்றால்

Mar 29, 2011

பருவ மழை தொடர்கிறது


மழையே யார் மீது காதல் இப்படி பொழிகிறாய்

ஏ மைனா அந்த நொடி நீ நானென்றால் நான் ஜென்ம சாபல்யம் அடைந்திருப்பேன் 

தலைவன் கூற்று 

விண் மேகத்தை போர்த்திக் கொள்ள 
போர்வைக்குள்ளே வலதும் 
இடதுமென அலைமோதியது திங்கள் 
மேகம் கலையாதோ திங்கள் தன்னை 
காணாதோ - எண்ணினான் ஞாயிறு 

உன் அருகே நான் மரமாக இருப்பேன். ஏனெனில் உன் நிழல் என்னிழலில் கலக்கும். என் வேர்கள் கால்களடி. உன்னை பின்தொடரும். நம் நிழல்கள் பிரியாது.   

தண்ணீரில் கோலம் போடும் விரல்களை என்ன செய்யலாம் 

நில் கவனி செல் என்று வாகனம் செல்லும் பாதையில் சாலை சந்திப்பு விளக்கை வைத்தான் (வாகனத்தை மனிதன் படைத்தான்).. ஆனால் பாவை பின் செல்லும் மனதிற்கு ஏன் மனதை படைத்தவன் வைக்கவில்லை (ரா" சாலை சந்திப்பில் இருந்து) (Ra" from traffic signal)

சமூத்திரத்தில் மழை பெய்தாலும் உன் முகம் கலங்கவில்லை 

நிலவில் ஹீலியம். காரணம் நீயடி. உன் கால் அடி பட்டு ஹீலியம் உருவாகிற்று 

பேசாமல் கொல்கிறாய். சிரித்தால் சித்தரவதை செய்கிறாய். பேசினால் என்ன ஆவேனோ 

நீ எனக்கு அறிமுகம் ஆகி ஆறாவது மாதம் உன் பற்கள் தெரிந்தன. இப்போது ஓர் ஆண்டு ஆகிறது. இப்பொழுதும் எல்லோரையும் வேற்று மனிதர்களாய் பார்க்கிறாய். ஆனால் என்னை அடையாளம் தெரிந்து கொள்கிறாய். ஓர் ஆண்டு  ஆயிற்றே சற்று நன்றாய் பேசுகிறாய் . ஆம் அவ்வப்போது 'ஆம்', 'உம்', 'ஹ்ம்ம்' என்று பேசுகிறாய். நீ (உன்னை) நான் ஈன்றெடுத்த மழலை என்று நினைத்தாயோ ?

நீ குளித்த குளத்தில் பவளத்தாமரைகள்  பார்க்கிறேன். வெண்தாமரைகள்  நாணத்தினால் பவளமாயிட்றோ ?  

உன் நினைவாலே நான் கட்டிய 
தேன் கூட்டை முன் இதயம் 
இருந்த இடத்தில் வைத்தேன்
உன் நினைவாலே வாழ்கிறேன் 

என்ன செய்வதென்று அறியாமால் (எதை) எதையோ செய்கிறேன்

எதிரே அவள் இருக்கையில், எள் அளவும் இமை அசையவில்லை. அவள் காதோடு பேச வேண்டியவற்றை கண்ணோடு பேசுகிறேன்  

நீ கடிக்கும் கரும்பு தன் இனிப்பை உன் பற்கள் இடம் சரணடயவைத்து சமர்பித்தும் விடுகின்றன

வீணை மீட்கும் ஒலியை உன் பற்கள் உரசுவதில் கேட்கிறேன் 

தினமும் முப்பது நாழிகை உன் நிழலை ஆதவன் களவாடுகிறான்... இதனை நீ அறிவாயா? 
(முப்பது நாழிகை - > இரவை கூறினேன்) 

கேள்வி தெரியாமால் விடை தேடுகிறேன் 

காலையில் புத்தகத்தை படித்தாலும் நீ பேசிய வார்த்தைகள் தான் கேட்குதடி

உன் பாத சுவடை கொள்ளை கொள்ள கடலை படைத்தானோ 

சப்பாத்தி மாவுல கொஞ்ஜோண்டு   ஒட்ன மாதிரி ஒரு மூக்க வெச்சுனு  தூங்கறா. தூங்கும் போது கூட அடக்கமா கைய கட்டினு தூங்கறா பாரேன். பாரேன் தூங்கினே அபிநயம் செய்யறா.

மௌனமே உன்னிடம் மௌனம் பழகக் கற்றுக்கொள்ளும். நீ கைக்கட்டி உறங்கினாலும் கடுகளவும் உன் மௌனம் குறையவில்லை . எப்படி பெண்ணே? ஏன் பெண்ணே? 

நான் பேருந்தில் ஏறியவுடன் நித்திரா தேவி ஆக்கிரமிப்பாள் என்று நீ என்னை ஆக்ரமித்தாயோ அன்று முதல் இரவில் கூட அவள் என் அருகில் வருவது இல்லையடி. ஆனால் உன்னை ஏன் இப்பொழுது ஆக்கிரமித்தாள். 

அவள் உள்ளே குளிர்சாதன அறையில் இருக்கிறாள். அந்தி மழை வானம் அர்த்தமில்லாமல் பொழிகிறது.

உணவகத்தில் குடைக்காக காத்திருந்தேன். எனது அருகாமையில் இருந்த ஊழியை என்னுடன் வந்தாள். ஆனால் 'அவள்'உடன் நடப்பது போன்றே எண்ணம். பாதி வழியில் ஊழியையின் 'அவன்' வந்தான். பிறகு தனியே கனவு கண்டுக்கொண்டே சென்றேன் 

மணலின் குற்று: நதியே (நீ செல்லும் பாதை எல்லாம் உன் முன் இருப்பேன்) என்னுடன் என் ஒரு வினாடி கூட நின்று பேசவில்லையே நீ?

முற்பிறவியில் நாம் முத்தம்மிட்டு கொண்ட சுவடுகள் நட்சத்திரங்கள். 

மரணம் சாலையில் சந்தித்தது 
நீ என் மனதில் இருப்பதை 
கண்டு பின் வாங்கியது 
சற்றும் கவலை இல்லையடி

உன்னுடன் உடன் பிறவா நோக்கமென்ன

மின்னும் உன்முகத்தை உனக்கு காண்பிக்க தக தகவென் ஓர் சூரியனை படைத்தான். அது அச்சப்பட்டு ஓரிடத்தில் நிற்காமல் பல நிறங்களில் உருவெடுத்து சுழல்கிறது 

உன் சிரிப்பில் மழலையை கண்டு மதி மயங்கி என் மனத்துக்கண் அகத்தை கண்டேன் 

பெண்ணே உன் மௌனத்தை கண்டு மனம் நர்த்தனம் ஆடுதடி

உன் இரு விரல்களின் இடுக்கில் கன்னத்தின் மழலை சதையை மெதுவாக பிடித்துகொண்டாய். எனக்கு வலிக்குதடி 

கண் கொட்டாமல் பார்க்கிறேன் கவிதை ஏதும் வரவில்லையடி!

என்னை உலகம் வேகமாய் சுற்றிக்கொண்டு இருக்கிறது நான் எதிரே உள்ள அலைகடலை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறேன்

என்ன செய்வதென்று அறியாமால் எதை எதையோ செய்கிறேன்

விண்ணில் உன்னுடன் செல்ல ஆசை அடி. உன்னுடனும் வரவும் அனுமதிக்க வில்லை. விண்ணிலும் செல்லவும் சந்தர்ப்பம் தற்பொழுது இல்லையடி. 

மனதில் எழும் கேள்விகளுக்கு விடையளிக்க யாரும் இங்கு இல்லை 

இலக்கணம் அறியேன் இலக்கியம் அறியேன். ஆனால் சற்று கவிதை மட்டும் வருகிறதடி. அதுவும் உன்னால். 

நான் துயிலில் இருப்பது போல் இருந்த பொழுது நீ "ரா"" என்று என்னை அழைத்தாய். அப்பொழுது, தாய் உறக்கத்தில் இருந்த போது கருவில் இருந்த குழந்தை 'அம்மா' என்று அழைத்த போது அந்த தாய் உணர்ந்த பரவசத்தை உணர்ந்தேன். 

எண்ணில்லா மழை துளிகளில் என் எண்ணத்தை வைத்தேன், மழை துளிகளில் என் எண்ணங்களை வைத்தேன். மழையில் நனையடி. உன் மேல் சிந்தும் முதல் தூல்லிலேயே என்னை உணர்வாய்  

உன் கையில் இருக்கும் இலை என்ன பாக்கியம் செய்ததடி 

நான் இன்று அவளை பிரிவதே அவளுடன் சேர்வதற்கு தான் 

உலகம் என் சூரியனை சுற்றுகிறது? நான் என் உன்னை நினைக்கிறேன்? 

மதுரையிலும் உன் முகம் மறவேன் அடி சகியே 

உனது பெயரை மணலில் எழுதினேன் அலை அள்ளிக்கொண்டது . மனதில் எழுதினேன் குருதியில் கலந்துவிட்டது. என்னுள் எங்கும் நிறைந்துவிட்டாய். 

மல்லிகையின் நறுமணம் உணர முடியவில்லை. ஏன் மனதில் வெள்ளை கமலம் தான் வீசுகிறது 

உன் கண்களில் கோடான கோடி காப்பியங்கள் எழுதி இருந்தால் படித்து முடித்திருப்பேன் அடி .

எட்டுத்தொகையிலும் உன்னை எழுதவில்லை, எண்ணிப் பார்க்கிறேன் அதை ஏன் இப்படி மெச்சி கொள்கிறார்கள் (என்று).

உனக்காக காத்திருக்கையில் மழையும் வெட்பமாய் வீசுகிறது 

உதகைக்கு சென்றாய் உதகை உருகியது. இமயத்திற்கு சென்றாய் இமயம் இடிந்தது. உன் அமைதியை கண்டோ? 

நாம் விட்ட மூச்சு கலந்தது நம் மனம் எப்போது கலப்பது?

புல்லின் கூற்று: மழையில் சிறந்த துளியான உன்னை சிறை பிடித்து 
வெயிலில் மின்ன செய்து மடலாடுவேன்(உன்னை உலகிற்கும் காண்பிப்பேன்) 

சம்பங்கியே நீ படர என்னை கொடுத்தேன் 
என்னில் படர்ந்தாய் என நினைத்தேன் 
ஆனால் என்னை சிறை பிடித்துவிட்டாய் 

சம்பங்கியே உன் நர்தனத்தில் லயிக்கையில் படர்ந்தாய் 
சில நாள் கழித்து உணர்ந்தேன் நான் இவ்வுலகில் இல்லை.
நீ என்னை சிறை பிடித்துவிட்டாய். மீள முடியவில்லை. 
எனினும் உன் அரவணைப்பில் வாழ்வதே பேரானந்தம்

தூங்கறா பாரேன். தோடு மட்டும் ஆடுது 

என்னால் தாங்க முடியவில்லை, பொறுக்கமுடியவில்லை. போதும் பெண்ணே எழுந்திரு. நான் ஒவ்வொரு கணம் பார்க்கையில் வெவ்வேறு கோணத்தில் உறங்குகிறாய். ஒவ்வொன்றிலும் உன்னை என் குழந்தாய் போல் உணர்ந்தேன் அருகில் இருந்து மயில் இறகால் விசிறாமல் போயிற்றே 

எனக்கென்று ஒரு மனம் அவள் இருக்கையை நாடுகையில் 
என் கௌரவம் என்னை தடுக்கிறது 

உண்டதும் உறங்குபவன். உன்னை என்னுள் உணர்ந்த பிறகு எங்கேடி உறக்கம்? 

எண்ணி எண்ணி பார்த்தால் எண்ணங்களில் எல்லாம் நீ தான் டி 

கருவிலே பத்து மாதம். பள்ளியில் பன்னிரண்டு ஆண்டு. கல்லூரியில் நான்கு ஆண்டு. கல்லூரியில் நான்கு ஆண்டு. உன்னுடன் மட்டும் வாழ்நாள் முழுவதும்.

உன் முகம் காணாமல் உறக்கமில்லை. நீ இல்லாமல் வாழ்வுண்டோ?

காரணமில்லாமல் கண்மூடித்தனமாய் உன்னை யாசிக்கிறேன் நேசிக்கிறேன்  காதலிக்கிறேன் 

உலகு: நிலவே என்னை உன் நிழல் என நினைத்தாயோ? என்னை பின் தொடர்கிறாய் 

நீ உறங்கும் பொழுது கணக்கில்லா நட்சத்திரங்கள் கண் கொட்டாமல்/இமைக்காமல் உன்னை காவல் காக்கின்றன. ஏனடி ?

உன் புன்சிரிப்பில் புலனைந்தும் புலப்படவில்லை 

தரணியில் தண்ணீர் இல்லையென்றாலும் பரவாயில்லை  
தங்கமே தாமரையே நீ இருந்தால் போதும் 
யாரிடமும் தோன்றவில்லை 
பலருடன் தோன்றிய உடன் மடிந்த காதல் 
உன்னுடன் உனக்காக மலர்ந்தது 

கண் முன்னும் நீ 
கண் மூடினாலும் நீ 
கண்ணே என் கண்ணா நீ 

விதைக்குள் விருட்சம் 
என்னுள் நீ 

"தீக்குள் விரலை விட்டால் நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா  நந்தலாலா" என்றான் "பாரதி". பொய்யடி உன்னை நெருங்கவே முடியாது 

தேய்ந்தாலும் நிலா அழகு தான் 

நொடியில் ஓர் கவிதை என்றால் உன் சிரிப்பு 

உன் வேர்வை என்ன பனி கட்டியில் இருந்து வடிந்த துளியோ? இப்படி சுடுகிறது 
(when I placed my hand on bus window in which she placed her hand, after she got down)

சொல்லில் குற்றமோ 
சொல்லிய விதத்தில் குற்றமோ 
பொருளில் குற்றமோ 
கூறியவனில் குற்றமோ 

பிரிந்த சாலைகள் மறுபடியும் ஓர் இடத்தில் ஒன்று சேரும் 

மின்சாரமாய் உடம்பில் ஒவ்வொரு அணுவாய் ஓடுகிறாய். வீட்டில் மின்சாரம் இருந்தும் துயில் இல்லையடி